Thursday, 29 September 2011
பதிவுலகில் அன்னா ஹஜாரே
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது
சில விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் உண்மை, திரிக்கப்பட்ட உண்மை, உண்மை அல்லாத செய்திகள் பற்றி தெரிந்து தெளிய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது
==================================================================
நன்றிhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=322332
:"சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்த குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,'' என, இந்திய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.
கூடங்குளம் குறித்து, இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்:
* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.
* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.
* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.
* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.
* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.
* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.
* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை.
- ஹெச்.ஷேக்மைதீன் -
Saturday, 24 September 2011
உலகமகா ரகசியக் கடிதம்

Friday, 23 September 2011
கலைஞர் பேச்சை அப்படியே பின்பற்றும் ஜெ
Monday, 19 September 2011
கேரளா மேட்டரே ஒரு மாதிரியாத்தான் இருக்கு
பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதால், ஏராளமான கேரள வனப்பரப்பு அழிவதுடன், பரம்பிக்குளம் அணை, தமிழகத்திடமிருந்து கை நழுவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் பிரதான அணையான பரம்பிக்குளம் அணை, கேரள வனப்பகுதியில் உள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இந்த அணை, இப்போதும் நமது பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலேயே உள்ளது. அணை அமைந்துள்ள வனப்பகுதி, கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஏற்கனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான மோதல் வலுத்துவரும் நிலையில், பரம்பிக்குளம் அணைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்கப் போவதாக, கேரள முதல்வர் அறிவித்திருப்பது, தமிழகத்தில் பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஆக்ரோஷமாகப் போராடி வரும் ம.தி.மு.க., இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்வதைக் கண்டித்து, கேரள முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்று கைதான ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் இதுபற்றி கூறியதாவது:பரம்பிக்குளத்துக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதில், இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன. 390 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ள பரம்பிக்குளம் வனம், கடந்த 2010 பிப்.,19ல் மத்திய அரசால் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த வனப்பகுதி, மிகவும் உச்சபட்சமாக பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதியாகும்.
நேரடி வழித்தடம் அமைக்க வேண்டுமெனில், ஏராளமான வனப்பகுதியை அழிக்க வேண்டியிருக்கும். வனம், வன விலங்குகள் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க உலகமெங்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.புலிகள் காப்பகத் திட்டத்துக்காக, காலம் காலமாக வனத்துக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களையே வெளியேற்ற மத்திய அரசு இழப்பீடு வழங்கி வரும் நிலையில், "காட்டை அழித்து ரோடு போட்டு, சுற்றுலாவை மேம்படுத்துவேன்' என்று கேரள முதல்வர் கூறுவது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்.அடுத்ததாக, பரம்பிக்குளம் அணைக்கு கேரள வனப்பகுதியில் பாதை அமைப்பதன் மூலமாக, அணையின் கட்டுப்பாட்டை தமது பிடிக்குள் கொண்டு வர வேண்டுமென்பதே கேரள அரசின் மறைமுக நோக்கம்.
ஏற்கனவே, முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைகளில் கேரள அரசு செய்து வரும் அத்துமீறல், உலகிற்கே தெரிந்ததுதான்.கேரள அரசின் இந்த முயற்சிக்கு, மத்திய அரசு எந்த வகையிலும் உடன்படக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இரு மாநில உறவுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இந்த விஷயத்தில், பரம்பிக்குளம் அணையை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டியது, தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கடமையாகும்.இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதே கருத்தை "ஓசை', தமிழக பசுமை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. பரம்பிக்குளம் அணைப்பகுதியில் ரோடு அமைக்க முயற்சி செய்தால், அனைத்து சூழல் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து சட்டரீதியாகவும், நேரடியாகவும் போராடவும் இந்த அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.
விழிப்பார்களா விவசாயிகள்?பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பரம்பிக்குளம் அணை தான். இந்த அணையின் மொத்த கொள்ளளவு, 17.5 டி.எம்.சி.,ஆகும். முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 15.5 டி.எம்.சி.,மட்டுமே. அந்த அணைக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதி, பரம்பிக்குளம் அணைக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைத்தால், நமது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அணை கை நழுவும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் பயன் பெறும் நான்கரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், இத்திட்டத்தால் குடிநீர் வசதி பெறும், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களும் பாதிக்கப்படும். விரிசல் பட்டுக்கிடக்கும் விவசாய அமைப்புகள், இதிலாவது ஒன்று திரண்டு போராடினால்தான் இதைத்தடுக்க முடியும்.
அடங்கொப்பா, அதுதான் நாட்டாமை, சூர்யவம்சம் மாதிரி படங்கள் எல்லாம் இப்ப வர்ரதே இல்லையா?
செய்திhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=315602வெளியானது அவர்களுக்கு நன்றி, வண்ணத்தில் இருப்பது நமது கேள்விகள்.
Friday, 16 September 2011
தணிக்கையில் சிக்கிய அண்ணா பல்கலை கழகம்
Sunday, 11 September 2011
முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்:- கலைஞர் கருணாநிதி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசின் அத்துமீறலைத் தடுப்பது தொடர்பாக திமுக வழக்குரைஞர்கள் ஆலோசனைகூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது: திமுகவில் வழக்குரைஞர்கள் அணி இருக்கிறதா என்று முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். நெருக்கடி நிலை காலத்தில்கூட யாரும் திமுகவை அடியோடு வீழ்த்திவிட முடியவில்லை.
தினமும் காலை ஏடுகளில் கைது செய்திகளைப் பார்த்து பதற நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் வழி காண வேண்டும். சட்டப் பிரச்னைகளைச் சட்டத்தால் சந்திப்போம் என்று சொல்பவர்கள் நாம். இன்றைக்கும் ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக நம்முடைய வழக்குகளைச் சந்திப்போம்.
காவல்துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும். நமக்கு எதிர்காலத்தில் என்ன கதி ஏற்படுமோ என்று இப்போதே பயப்பட வேண்டும். அதற்கேற்ப தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி நம்மை நோக்கி வருகின்ற துறையினரைக் கேள்விகள் கேட்க வேண்டும். "தகலறிதல்' என்றாலே அவர்கள் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கின்ற ஓர் எச்சரிக்கைக் கருவியாக ஆகக் கூடும். எனவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துங்கள்.
ஏழை கட்சி: அந்தப் பணிக்குப் பணம் செலவழிக்க வேண்டுமே? என்று வழக்குரைஞர்கள் கேட்கலாம். பெரிய பொதுத் தேர்தலைச் சந்தித்துவிட்டு ஆட்சி பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கின்ற கட்சி திமுக என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழுக்குரைஞர்களுக்கு இருப்பதை மனதில் வைத்துக்கொண்டு தலைமைக் கழகத்தை எதிர்பார்க்காதீர்கள்.
அரசுக்கு அச்சம்: வழக்குரைஞர்கள் பெருந்திரளாக கூடியிருப்பதே இந்த அரசை மிரட்டுகின்ற ஒரு செய்தியாகவே நான் கருதுகிறேன் என்றார் கருணாநிதி.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் என்.ஜோதி, தலைமைக்கழக வழக்குரைஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், இ.பரந்தாமன் உள்பட
வழக்குரைஞர்கள் பலர் கூட்டத்தில்
பங்கேற்றனர்.
thanks http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=474788&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
Saturday, 3 September 2011
ஹசாரா கூட்டத்திற்கு கலைஞர் வைத்த ஆப்பு
படிக்க அனுப்பி வைக்கறாங்க. அது ஏன்னாஇந்த மாதிரி மேல் படிப்பு படிக்கறவங்களுக்கு அரசு சலுகை கொடுத்து
உதவி செஞ்சா அவங்க திரும்பி வந்து மக்களுக்குப் பயன் படுற மாதிரி வேலை செய்வாங்க அப்படின்னு நம்பிக்கை
க்ஜ்ரவால் மேட்டரில் பார்த்தா அவர் முழுசா படிப்புக் காலம் முழுவதும் சம்பளம் வாங்கிருக்கார். அதாவது அவர் ஏற்கனவே பார்த்த வேலையில் (ஐ.ஆர்.எஸ்) வாங்கிட்டு இருந்த சம்பளம். திரும்ப வேலைக்குச் சேருகிறார். ஒரு வருஷம் வேலைக்கே போகல. மேலதிகாரிகள் நோ வொர்க், நோ அப்படின்னு அத சான்க்ஷன் பண்றாங்க. ஒப்ப்ந்த காலம் முடிஞ்சதும் வேலயை ராசினாமா செய்யறார். ஒப்பந்த காலம் முடியல, நீங்க வேலை செய்யணூம் அப்படிங்கறாங்க. இவரு நான் வேலை செஞ்சிட்டென். நான் வ்ரலேன்னு மேல்திகாரிங்க ஒத்துக்கிட்டாங்க, அப்படின்னா நான் வேலைல்ல இருக்கேன்ன்ன்னுன்னுதான அர்ட்தம் அப்படிங்கறார்.
இவங்களுக்கு சம்பளம் கொடுத்து படிக்க வைச்சதே நாட்டுக்கு வேலை செய்வாங்கன்னுதான். ஆனா இவர் சூப்பர் அல்வாவ தூக்கிக் கொடுட்திருக்கார்.
இதுக்கு அடுத்ததா இவர் விருது வாங்கி அதுக்கு கொடுத்த பணத்த மக்கள் சேவைக்கு அள்ளிக் கொடுத்துட்டேன் அப்படிங்கறார். எந்த மக்களுக்கு கொடுட்திருக்கார் அப்படின்னா இவரே ஆரம்பிச்சு இவரே மெயிண்டன் ப்ன்ற ஒரு கம்பனி அது. பழைய ராஜாக்கள், ஒரு கோயில்கட்டி அதுல ஒரு சிலைய வச்சு, எல்லா நகை வருமாணத்தையும் கோயில்ல காணிக்கை ஆக்கிருவாங்க. உலகமே நினைக்கும் கோயில் பொது சொத்து அப்படின்னு, அந்த ஊர் காரங்க மட்டும் கோயில்தான் ராஜா, அவருக்குத்தான் முதல் மரியாதை. அவர் வெச்சத்துதான் எல்ல்லாம் அப்படி வாழ்வாங்க அப்படித்தான் இது
இதப் பத்தி நியூஸ் போட்டா அரசியல் காழ்ப்புணர்ச்சி அப்படின்னு அவரோட அடிபொடிகள் வந்து கமெண்ட் அள்ளி விடுறாங்க. ஏன் மூனு வருசம் கழிச்சு கேட்கறாங்க அப்படின்னு அளக்கறாங்க. அப்ப இவங்க கொண்டு வரப்போற மசோதாவிலயும் அன்னைக்கே புகார் கொடுத்தாதான் ஒத்துப்பாங்களா?
இப்பக்கூட தமிழ்நாட்டில அரசாங்க சம்பளம் வாங்கிட்டு மேல்படிசிட்டு ஒரு கூட்டம இருக்காங்க. அதில் திறமையான ஆட்களுக்கெல்லாம் தனியார்ல பல லட்சம் அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அரசாங்க நிபந்தனைக்கு பயந்துக் கிட்டு இருக்காங்க. ஆனா கஜ்ரவால் போன மாதிரி தமிழ்நாட்டு ஆட்கள் போக முடியாது கலைஞர் அரசு என்ன பண்ணியிருக்காங்கன்னா, அரசாங்க உதவியோட மேல படிக்க போறியா, நீ ஓய்வு பெரும்வரை தமிழ்நாட்டுக்கு வேலை செய்யணும்னு எழுதி வாங்கிட்டுய்த்தான் படிக்கவே அனுப்பி இருக்காங்க.
நல்ல வேளை தமிழ்நாட்டுல போன அரசாங்கம் இவங்களுக்கு ஒரு ஆப்பு வெச்சுது. இல்லையினா மக்கள் செலவுல படிட்டு தனியா ஒரு மக்கள் சேவை மையம் அமைச்சு அதுக்கு சம்ம்பாதிக்கும் பணத்தை அப்படியே கொடுத்து ம்க்காள் சேவை செய்து உலக அளவில ஃபண்ட் தேர்த்தி சந்தோஷமா மக்கள் சேஎவை செஞ்சு வாழ்ந்திட்டு இருப்பாங்க. இப்பக்கூட கெஜ்ரவால் த்ப்பிச்சிட்டாருன்னா இங்கையும் நெரயாப் பேர் எஸ்கேப் ஆயிடுவாங்க
கடைசிக்கு கைக்காசு போட்டு மெழுகுவர்த்தி வாங்கிப் போராட்டம் பண்ணின அப்பாவிகளுக்கு மெழுகும் மிஞ்சி இருக்காது. திரியும் மிஞ்சி இருக்காது.