Friday 25 November, 2011

அடுத்தவன் அடிபடும்போது சந்தோசப் படும் ஜந்துக்கள்

தெரிஞ்சவரோ, தெரியாதவரோ அடிப்பட்டதாக கேள்விப் பட்டால் சராசரி மனிதனுக்கு என்ன தோன்றும்? ஐயோ பாவம், ஒன்றும் ஆபத்து இல்லையே என்று விசாரிப்பார்கள். ஒரு சிலருக்கு ஒன்றுமே தோன்றாது.

ஆனாப் பாருங்க. இப்ப சிலர் ஒரு அடியா? ரெண்டு அடியா என்று சந்தோஷமா கேட்கறாங்க. இன்னைக்கு பேப்பர்ல பார்த்தா அடிவாங்கினவர் அப்படிப்பட்டவர் இப்படிப் பட்டவர் அப்ப்டின்னு சொல்லி அடிச்சவனுக்கு வக்காலத்து வாங்கறாங்க

எனக்கு என்ன டவுட்னா இப்படிப் பேசறவங்கள நீ ரா-ஒன்னு கரினாவோட தொப்புளப் பார்த்த அதனால கலாச்சார சீரழிவுன்னு யாராவது அடிச்சா அடிய விடுங்க பாஸ். அந்த அவமானம் உங்களுக்கு பெரிசா தெரியாதா? உங்க வீட்டுப் பொண்ணு நடக்கும்போது கொஞ்சூண்டு இடுப்பு தெரியமாதிரி இருக்கு அதனால ஊர் வாலிபர்கள் கெட்டுப் போறாங்கன்னு சொல்லி ஏதாவது தண்டனை கொடுத்தா நீங்க இப்படித்தான் பேசுவீங்களா பாஸ்.

=============================================
கண்டிப்பாக சரத்பவாரை அடித்த ஹர்விந்தர் சிங்கும் அவனை ஆதரிக்கு அனைத்து கொடூர பிறவிகளும் கண்டிக்க, தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அட்லீஸ்ட் திருந்துங்க பாஸ்

2 comments:

SURYAJEEVA said...

ரௌத்திரம் பழக ஹர்விண்டேருக்கு தெரியவில்லை போலிருக்கு

ஆனாலும் இந்த டிராமா எதுக்கு?

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! தங்கள் கருத்து சரிதான். வயதான சரத்பவாரை அடித்தவன் மனநோயாளியாக இருக்க வேண்டும். அலுவாலியா போன்றவர்களை ஹர்விந்தர் சிங்கால் தொட முடியுமா? சிங்குகளே இந்த சிங்கை விளாசித் தள்ளிவிடுவார்கள். யாருக்காக இந்த ஸ்டண்ட் என்பது பின்னால் தெரிய வரும்.

Post a Comment