Monday 27 June, 2011

பெட்ரோல் விலை குறைய வழி

பெட்ரோல் விலை, கேஸ் விலை உயர்வைக் கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். அதுவும் காமெடி தர்பாராக

ஒன்று சிலிண்டரை தூக்கிப் போட்டுவிட்டு விறகு அடுப்பில் வைத்து சமைப்பது, பெட்ரோல் வண்டிக்குப் பதிலாக மாட்டு வண்டியைப் போட்டு ஓட்டுவது.

இந்த மாதிரி உருப்படவே செய்யாத போராட்டங்கள் நடத்தினால் ஆட்சியாளர்களுக்குத்தான் உறைக்குமா? பெட்ரோல் அதிபர்கள்தான் பரிதாபப் படுவார்களா?

விலை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மக்களின் உண்மை நிலையை எடுத்து உறைக்கும் வண்ணம் போராட்டங்கள் இருக்க வேண்டும். அனுதினமும் மக்கள் எளிமையாக தொடர்ந்து அமையும் வகையில் போராட்டம் இருந்தால்தான் இந்த நாடு உருப்படும்.

Sunday 26 June, 2011

தணிக்கை

அனைவருக்கும் கல்வி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களையும் தணிக்கை செய்ய விருப்பம் தெரிவித்து தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் தூசிபடிந்து கிடக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வளவு காலமாக இந்த இரு முக்கிய திட்டங்களின் செலவினங்களும் தணிக்கையின்கீழ் வரவில்லை என்பதே புதிய தகவல். இந்தக் கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கிடப்பில் போட்டிருப்பது என்பது அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி.
அண்மையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்தது, தனியாருக்காக செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை வெளிக்கொணர்ந்தது இவை எல்லாமும் சி.ஏ.ஜி. மூலம்தான் அம்பலத்துக்கு வந்தன. ஆண்டுக்கு ரூ.80,000 கோடி வரை செலவிடப்படும் அனைவருக்கும் கல்வி மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அவர்கள் தணிக்கை நடத்தினால், மிகப்பெரிய ஊழல்கள் அம்பலத்துக்கு வரக்கூடும் என்பதால்தான் மத்திய அரசு தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே செண்பக அணை கட்டப்பட்டது.
இதில் 7 நீர்போக்கிகள் இருப்பதாகக் கணக்கு எழுதப்பட்டு செலவும் எழுதப்பட்டது. ஆனால், கட்டப்பட்டவை வெறும் 4 நீர்போக்கிகள் மட்டுமே.
இத் திட்டச் செலவைத் தணிக்கை செய்த மத்திய தணிக்கைத் துறையின் (அக்கவுண்டெண்ட் ஜெனரல் அலுவலகம்) நேர்மையான அதிகாரி, இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதைத் தனது அறிக்கையில் பதிவுசெய்தது மட்டுமல்ல, அந்த அணையை நேரில் ஆய்வுசெய்து, புகைப்படம் எடுத்து, நான்கு நீர்ப்போக்கிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்பதைச் சான்றாதாரமாக இணைத்தார். விளைவு? நான்கு பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இவ்வாறு கணக்கு எழுதச்சொன்ன அரசியல்வாதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக பொதுப்பணித்துறையில் ஒரு உள்தணிக்கைப் பிரிவு உள்ளது. இந்தத் திட்ட நிதிக்குத் தரப்படும் ஒதுக்கீட்டை இவர்கள்தான் கண்காணிக்கிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை. பாவம், உடந்தையாக இருந்து மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்
கீழ்ப்படிந்து
நடந்த நான்கு பொறியாளர்கள் மட்டுமே மாட்டிக்கொண்டார்கள்.

தமிழக உள்ளாட்சித் தணிக்கையில் ஏன் இது கவனம் பெறவில்லை என்றால் இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, மத்திய தணிக்கைத் துறை அலுவலத்தின் தணிக்கை அதிகாரி எந்தவொரு திட்டப் பணியையும் நேரில் சென்று ஆய்வு நடத்த அதிகாரம் பெற்றுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையின் கணக்கையும் தணிக்கை செய்யும் தமிழ்நாடு உள்ளாட்சித் தணிக்கைப் பிரிவு அதிகாரிகளுக்கு நேரில் போய் பார்க்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ரசீதுகளை ஒப்பிட்டு, கணக்கைச் சரிபார்ப்பதோடு சரி என்பதுதான்.

நகராட்சிகளிலும் பஞ்சாயத்துகளிலும் புதியதாக சாலை அமைக்கப்பட்டதாக நிறைய ரசீதுகள் வரும்.
அதை ரசீதுப்படி டிக் செய்யும் வேலையை மட்டுமே தமிழ்நாடு உள்ளாட்சி தணிக்கைத் துறை செய்ய முடிகிறதே தவிர, உண்மையிலேயே இந்தச் சாலை போடப்பட்டுள்ளதா என்று போய் நேரில் ஆய்வுசெய்ய முடியாது.
அதேபோன்று, சத்துணவுத் திட்ட ஆய்வுகளில் கூட வெறுமனே மூட்டைகள் இருக்கிறதா என்கிற ஆய்வோடு முடித்துக்கொள்ளத்தான் அதிகாரம் உள்ளது.

வேளாண் விரிவாக்க மையத்துக்கு மத்திய அரசின் மூலம் அளிக்கப்படும் மானியம் கோடி கோடியாய் வருகிறது. அவை உண்மையாகவே பயனாளிக்குக் கிடைத்ததா என்பதை தமிழகத்தின் உள்ளாட்சித் தணிக்கைத் துறை பயனாளிகளை நேரில் போய் பார்த்து, கள ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கு அனுப்பப்படும் ஆவணங்களையும், ரசீதுகளையும், சான்றுகளையும் பார்த்துத் தணிக்கை நடத்த வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேரில் ஆய்வு செய்யவும், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் தாங்களே அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவும் அதிகாரம் வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலவலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ரசீதுகளில் குளறுபடி தெரியவந்து, மொத்த கோப்புகளையும் கொண்டு வந்து வைக்கும்படி சொன்னால், குறிப்பிட்ட அலுவலர் சில மாதங்களுக்கு விடுமுறையில் போய்விடுவார். அந்தக் கோப்புகள் வரவே வராது. ஆய்வு முடியும் வரை அவர் விடுப்பில் இருக்கிறார் என்றே காரணம் சொல்வார்கள்.
கோப்புகளைப் பார்க்க முடியவில்லை என்று தணிக்கையில் பதிவு செய்ய முடியுமே தவிர, அந்தக் கோப்புகளைத் தராமல் ஏமாற்றிய அந்த அலுவலகத்தின் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கோர முடியாது.

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் மிகப்பெரும் மோசடிகள் நடந்துள்ளன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தலைமைக் கணக்கு தணிக்கையாளருக்கு இந்த அதிகாரத்தை வழங்கினால், அவர்கள் வந்து ஆய்வு செய்தால், செண்பக அணையில் சிக்கியதுபோல எத்தனை அலுவலர்கள் சிக்குவார்களோ தெரியாது.

திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடிக் கொண்டேதான் இருக்கும் என்பதற்காக அதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய கூட்டம் மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது. பல தவறுகளைத் தடுக்க முடியாவிட்டாலும் தவறு செய்தவர்களை அவ்வப்போது இனம் கண்டு தண்டிக்க முடிந்தால் தவறுகள் குறைய அது காரணமாக அமையும்.

நன்றி http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=436779&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B...?

Friday 24 June, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.

""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்''
என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது.
இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை.
இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?

நன்றிhttp://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=432267&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%202%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF...!

Wednesday 22 June, 2011

வளர்ச்சி நிதியா, விரய நிதியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென தனியாக தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது என்பதே தவறு என்பதுதான் நமது கருத்து. மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பது சட்டம் இயற்றலும், மக்கள் பிரச்னைகளையும் தங்களது தொகுதியைப் பாதிக்கும் பிரச்னைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதுதான். தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களது வேலையை மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்ளும்போது கடமையும் நிதியும் திசை மாறுகிறது. இரட்டை வேலையாக மாறிப்போகிறது. ஆனால், இந்த நடைமுறையை நம்மால் மாற்றிவிட முடியாது என்கிற நிலையில், இதில் முறைகேடு இல்லாமலும், மக்களுக்கு உண்மையாகவே பயன்படும் வகையிலும் இத்திட்ட நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதுதான் நமது கருத்து.

ஆண்டுதோறும் ரூ.5 கோடி வீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி, சுமார் ரூ. 4,000 கோடி முறையாகச் செலவிடப்படுகிறதா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவிக்காலமான 5 ஆண்டுகளில் ரூ.25 கோடி ஒதுக்கீடு பெறவும், அவர் விருப்பம்போல திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளவும் முடியும் என்கிறபோது, இத்திட்டம் மக்கள் விருப்பமாக இருக்கவேண்டுமே தவிர, எம்எல்ஏ அல்லது எம்பியின் சொந்த விருப்பத்துக்காக, சுய விளம்பரத்துக்காகச் செய்யும் செலவுகளாக அமைந்துவிடக்கூடாது.

மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் திட்டங்களை ஆட்சியரும் அதிகாரிகளும் அனுமதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்ற நிலையை மாற்றவும், எந்தெந்தத் திட்டங்களை மட்டும் இத்திட்டத்தில் நிறைவேற்ற முடியும் என்கிற கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகிறது.

தனது பெயரை விளம்பரப்படுத்தும்விதமாக சாலையில் நிழற்குடை கட்டப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், நூறு மீட்டர் தள்ளி புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதைக் காணும்போது, நம் கண்ணெதிரில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுவதைத் தவிர, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, இப்படி ஓராண்டுக்குள் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழும் என்று தெரிந்தால், அதிகாரிகள் இத்தகைய நிழற்குடையை இடம்பெயர்க்க தக்க வடிவமைப்பில் அமைக்கத்தான் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதைப்பற்றி யோசிக்கவும்கூட, உண்மையை அறிந்துகொள்ளவும்கூட நேரமில்லாமல் மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு வழங்கும் திட்டச்செலவு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆக,
இதுநாள் வரை இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் திட்டநிதிஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அரசுப் பணத்தை எதற்காக இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்குச் செலவிட வேண்டும்?
ரூ.50 லட்சம் என வரையறை செய்வதைவிட இதை முற்றிலுமாக நீக்குவது என்பதே நியாயம்.

ஒரு எம்எல்ஏ, எம்பி என்பவர் தனது தொகுதிக்காக என்ன நன்மை செய்தார் என்பதை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை நம்மிடம் இல்லை. இவர்கள் கட்டித் தரும் கட்டடங்கள் அவர்கள் காலத்திலேயே இடிந்து விழுமெனில் அதன் தரம் குறைந்த கட்டுமானத்துக்காக அவரையும் பொறுப்பேற்கச் செய்யும் விதிமுறைகள் இந்தத் திட்டத்தில் இல்லை. ஆகவே, முறைகேடுகளுக்கு அதிக இடம் அளிப்பதாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடர்கிறது.

இரண்டு லட்சத்துக்கும் குறைவான திட்ட மதிப்பீடு இருப்பின் முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்படும் என்கிற புதியநடைமுறை, அவசியமற்ற சிறுசிறு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும்
. தொகுதிக்கு வெளியே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஏதாவது ஒரு திட்டத்துக்குச் செலவிடலாம் என்பதும் கண்ணுக்குத் தெரியாத இடத்தில், திட்டத்தைச் செய்ததாகச் சொல்லி பொய்யாகக் கணக்கெழுதவே உதவும்.

ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி வரை செலவிடப்படுவதால், இதில் பாதித் தொகையையாவது தேசிய அளவிலான ஒரு பொதுத்திட்டத்தை வரையறுத்து அதைச் செய்வதற்காக ஒதுக்கீடு செய்தால் மக்களுக்குப் பயன் தருவதாக அமையும்.

உதாரணமாக, 2011-12-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்காகக் கழிப்பறை வசதி, சுத்திகரிப்பு கருவி பொருத்திய தூய்மைக் குடிநீர் வழங்கல் ஆகிய திட்டத்துக்காக மட்டுமே 50 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும், இத்தகைய ஏதேனும் ஒரு பொதுத்திட்டத்துக்குப் பாதி நிதியை ஒதுக்கவும், இதற்காக இடங்களைத் தீர்மானிப்பதில் மட்டுமே எம்பிக்களுக்கு விருப்புரிமை வழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது நாடு தழுவிய ஒரு திட்டம் எம்எல்ஏ அல்லது எம்பியின் நேரடிக் கண்காணிப்பில் முறையாக நிறைவேற்றப்படும்.

மீதமுள்ள 50 விழுக்காடு தொகையை, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்பு நாளில் கிடைக்கும் மனுக்களில் சொல்லப்படும் மக்கள் தேவைகளில், அரசால் உடனடியாகச் செய்ய இயலாத நிலையில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ளப் பரிசீலிக்கலாம்.

இத்தகைய கட்டுப்பாடுகள், இத்திட்டம் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பமாக இல்லாமல் மக்களின் தேவை கருதிய விருப்பமாக இருக்கும். மக்கள் பணம் மக்களுக்கு முறையாகச் செலவிடப்படும்.

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவது தடுக்கப்பட்டு ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது குறிக்கோள் இல்லாமல் வாரி வழங்கப்படும் "எம்பிக்கள் வளர்ச்சிநிதி' என்பதாகத்தான் இருக்கும்.

நன்றி:-http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=435222&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Tuesday 21 June, 2011

எம்ஜியாரின் கொடி சமச்சீர் பாடப் புத்தக்த்தில்

இன்றைய செய்தி ஒன்றைப் படித்த போது உருண்டு புரண்டு சிரிக்க வேண்டும் போல இருக்கிறது. ஆறாம் வகுப்பு பாடப் புத்தக்த்தில் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=261263 அறிவியல் பாடத்தில் 81ம் பக்கத்தில் சட்ட காந்தம் படம் போடப் பட்டுள்ளதாம். அது கருப்பு சிவப்பு வண்ணத்தில் இடம் பெற்றிருப்பதால் அதை ஸ்டிக்கர் ஒட்டி அழிக்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாம். என்ன கொடுமை சார் இது?

கருப்பு, சிவப்பு வண்ணக்கலவை என்பது திமுகவுக்கு மட்டும் என்பது போல சென்ற முறை வகுத்தவர்கள் அதை திணித்ததுபோலவும், இந்த ஆட்சி மறைத்தது போலவும் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் யாரும் அ இ அதிமுக கட்சியின் கொடியை பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவர்க்ளது கொடி இன்னும் கருப்பு சிவப்பு வண்ணத்தில்தான் இருக்கும். நடுவில் அண்ணாவின் படம் தாங்கி நிற்கும்.

இப்படி கழகங்களுக்கு பொதுவான ஒரு வண்ணத்தை அழிப்பதால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

Monday 20 June, 2011

கனிமொழிக்கு இழைக்கப் படும் அநீதி

கனிமொழி அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவரை சிறையில் அடைக்கவேண்டிய அவசியல் என்று கேட்டால் எதுவும் இல்லை. கலைஞர் டிவி வாங்கப் பட்ட பணம் லஞ்சப் பணம் என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. இருந்து விட்டுப் போகப் பட்டும்.

குற்றத்தை உறுதி படுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. ஆனால் விசாரணைக்காக வைத்திருக்கிறார்களாம். சிபிஐ கூப்பிட்ட போதெல்லாம் விசாரணைக்காக் வந்திருக்கிறார். இனியும் வருவேன் என்று உறுதி கூறுகிறார்.


வெளியில் விட்டால் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். கனிமொழியின் மேல் அக்கறை உள்ள யாருமே வெளியே இல்லாதமாதிரியும் அவர் வந்து தான் சாட்சிகளை கலைக்க வேண்டி வரும் என்றும் சொல்வது எந்த வகையில் சேர்த்தி!

2ஜி வழக்கில் இவரது பங்கு இங்கு மட்டும்தான் இருப்பதாகச் சொல்லும் சிபிஐ உறுதி செய்து தண்டனை வாங்கிக் கொடுப்பதை விட்டுவிட்டு ஏன் உள்ளேயே வைத்திருக்க வேண்டும்?

கனிமொழி வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கை விட்டு வெளியே வந்தபோது கனிமொழியை ஜாமீனில் வெளிவிடச் சொல்லி பெரிய இடத்து பிரஷ்ஷர் வந்ததால்தான் அவர்கள் ஒதுங்கினர் என்று சொல்லும் மனிதர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். கனிமொழியை வெளியெவிடக் கூடாது என்று சிலர் வற்புறுத்தியதால் மனம் இடம் கொடுக்காமல் விலகி இருக்கலாம் என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள்.

கலைஞர் மேலும் கனிமொழி மேலும் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கோபம் இருந்துவிட்டு போகட்டும். கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருப்பது ஏன் என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு ஒரே பதில்தான் தோன்றும். கலைஞரை, திமுக வை மிரட்ட, ஏன் மிரட்டவேண்டும்? பொதுவாக திராவிட மக்கள் என்றாலே காங்கிரசுக்கு ஒரு காட்டமான பார்வை இருக்கும்.


இது இல்லாமல் இன்றொன்றையும் கேளுங்கள். இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசில் முக்கிய முடிவுகள், டெண்டர்கள் காபினெட் அனுமதி இல்லாமல், பிரதமருக்குத் தகவல் தெரியாமல், முக்கியமாக அவர்களின் வழிகாட்டி சோனியாவுக்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா? ஒரு கக்கூஸ் காண்டிராக்ட் விடவே அந்தப் பகுதியில் உள்ள அனைத்து பெரும்புள்ளிகளும் தலையிடும்போது இந்த 2ஜி ஒதுக்கீடு இவர்களுக்கெல்லாம் தெரியாமல் போனதா? இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்க வேண்டியதுதானே? சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என்ற வாதத்தை வைக்க வேண்டியதுதானே?


Sunday 19 June, 2011

கிழிக்கறாங்க (அரசாங்க சம்பளத்துடன்)

http://img.dinamalar.com/data/uploads/WR_930868.jpeg


அப்படித்தான்



Saturday 18 June, 2011

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கலைஞர் பாராட்டு

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரகள் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடித்ததில்

தி.மு.க., ஆட்சியில், 2006ம் ஆண்டு, 3,136 கோடி ரூபாய் மதிப்பில், எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலம், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கும். மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கும்.


வடசென்னை அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2,475 கோடி ரூபாய் மதிப்பில், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி, வரும் செப்டம்பர் மாதம் துவங்கும். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு திட்டங்கள் 8,362 கோடி ரூபாய் மதிப்பில், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஒரு திட்டம், 2013ம் ஆண்டு மார்ச் மாதம், மற்றொரு திட்டம், செப்டம்பர் மாதம் உற்பத்தியை துவக்க உள்ளது.


கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 1,126 கோடி ரூபாய் முதலீட்டில், 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2009ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி இம்மாதம் துவங்க உள்ளது. என்று கூறியுள்ளார்.


இந்த திட்டங்களின் பலனாகத்தான் அதிமுக ஆட்சியாளர்கள் மின்வெட்டை நீக்க முடியும் என்று சொல்லுகிறார்கள். எப்படியோ மின்வெட்டு நீங்கினால் மகிழ்ச்சிதான் என்று சொல்லியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


திமுக ஆட்சியில் மேற்கொண்ட இத்தனை திட்டங்களை அதிமுக ஆட்சியாளர் தொடர்ந்து சிற்பபுற நடத்துவதை கலைஞர் அவர்களே கடிதம் மூலம் பாராட்டியிருப்பது மக்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை உருவாக்கிருக்கிறத


மேலும் விவரஙக்ளுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=259456

திராவிடம் என்பது தூய சமஸ்க்ருத சொல்

திராவிடம் என்பது தூய சமஸ்க்ருத சொல். (நேத்ரம் + ராவி + இடம்) = நேத்ராவிடம் என்பது மருவி திராவிடம் என்றாகியது. நேத்ரம் என்றால் புனிதமானது என்று பொருள். ராவி என்பது ரவி அதாவது சூரியனை குறிக்கும். இதன் முழுமையான பொருள் சூரியனை(ரவி) போன்ற புனிதமான இடம் என்று ராவி ஆற்றங்கரை பகுதிகளை குறிக்கும்.

திராவிடம் என்பது பகுதியின் பெயர். இன்றைய ஹிமாச்சல் மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ராவி ஆற்றங்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களின் பகுதியை குறிப்பதுஇந்த பகுதிகளில் வாழ்தவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர்.


இவர்கள் சிந்து வெளி நாகரீக மக்களோடு தொடர்பு கொண்டவர்கள். தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணபடுபவர்கள் போர் முறையில் சிறந்த ஆரிய மக்கள் எனப்படும் அர்மீனிய மக்கள். இவர்கள்தான் பிற காலத்தில் தங்களை தொழில் முறையில் பிரித்து கொண்டு வர்ண பேதத்தை தங்களுக்குள் உருவாக்கி கொண்டவர்கள். தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பாலான சாதிகள் இந்த ஆர்மினிய (ஆரிய) வட்டத்துக்குள் வருபவர்கள். அறிவியல் முறைப்படி(molecular genetics) படி எல்லா சாதிகளும் ஒன்றுதான் என்பதும் உண்மையாகி விட்டது . மற்றபடி திராவிடன் ஆரியன் என்றெல்லாம் பிரித்து பார்ப்பது முட்டாள்தனமான பழமைத்தனமான கருத்து. (கொசுறு: கழகம் என்பதும் தூய்மையான பிராமி சொல். கழகம் என்பது சேவைகளை செய்யும் அமைப்பு. அற பணிகளை செய்யும் அமைப்பு என்பது பொருள்.) தமிழ் என்றால் பிராமியில் சூரியன் என்று பொருள்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=259450 தென்பட்ட ஒரு பின்னூட்டம்

Thursday 16 June, 2011

""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,''

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.


""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

நன்றி http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258416

Tuesday 7 June, 2011

சமச்சீர் கேபிள் டிவி

நடுநிலையாளர்களிடம் ஜெயலலிதா அவர்கள் கண்டபடி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். சென்ற ஆட்சியில் கொண்டு வந்த கடைக்கோடி மனிதனும் நன்மைபெறும் திட்டங்களை எல்லாம் ரத்து செய்து விட்டதால் அவர் அந்த நடுநிலையாளர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நாம் கொடுக்கும் திட்டம்தான் சமச்சீர் கேபிள் டிவி திட்டம்.

நாட்டில் இப்போது பல டிவிக்கள் பல டிடிஎச்கள் வந்து விட்டன. மக்களும் எதைப்பார்பபது எதைவிடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். கட்டணங்களும் கண்டபடி இருக்கின்றன. ஆனால் தமிழ் நாட்டின் கடைக்கோடி மனிதனும் பயன்பெரும் திட்டம்தான் இந்த சம்ச்சீர் கேபிள் டி.வி திட்டம்.

இதன்படி அனைத்து சேனல்களும் ஒரேமாதிரியான நிகழ்ச்சிகளைத்தான் ஒளிப்பரப்ப வேண்டும்.

குடும்ப பெண்களை மிகவும் குழப்பும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் வருவதால் அந்த நிகழ்ச்சிய்களை எடுக்கும் பொறுப்பு ராதிகாவின் கம்பெணிக்கும் குஷ்புவின் கம்பெணீக்கும் வழங்கப் படும். அவர்களிடமிருந்து மட்டுமே அனைத்து குடுமப சீரியல்களும் பெறப்படும். அவர்களிடமிருந்து வருவஹ்டால் அரசு தரத்தை உறுதி செய்து கொள்ளும். தவறு செய்யும் நேரத்தில் சுட்டிக்காட்டவும் முடியும்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் அனைத்த்து தொலைக்காட்சிகளும் அந்த் நிகழ்ச்சீயை ஒளிபரப்பிக் கொள்ளலாம். அதற்காக கலைஞர் டிவிக்கு எந்த காசும் கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் கலைஞர் டிவியில் வரும் விளம்பரங்கள் தவிர வேறெதையும் ஒளிபரப்பக் கூடாது.


நாட்டில் பொதுமக்களின் அறிவை வளர்க்கும் வகையில் எல்லா ஊர்களிலும் இருக்கும் கேபிள் டிவிகளும் செய்திச் சேனல்கள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். அவர்கள் இலவசமாக கலைஞர் டிவியில் வரும் செய்திகளை உபயோக்ப படுத்திக் கொள்ளலாம் இதற்காக கலைஞர் டிவி எந்த காசும் பெற்றுக் கொள்ளாது. உள்ளூர் செய்திகளுக்கு திருச்சிக்குத் தெற்கே கலைஞர் டிவியிலிருந்தும் திருச்சிக்கு வடக்கே சன் டிவியில் இருந்தும் குறைந்த கட்டணத்தில் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

நகைச்சுவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் வடிவேலுவும் ஐ.லியோனியும் நியமிக்கப் படுவார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவர்களின் அலோசனையை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியும்.

திரைப்படங்கள் அனைத்தும் கலைஞர் டிவியிலிருந்து ஒளிப்பரப்பாகும். இதை மற்ற தொலைக்காட்சிகள் எந்தக் கட்டணமும் இன்றி ரிலே செய்து கொள்ளலாம். ஆனால் எந்த க் கூடுதல் விள்மபரத்தையும் ஒளிப் பரப்பக் கூடாது.

மற்ற டிவிக்கள் ஏதாவது படங்களைத் திரையிட நினைத்தால் அதையும் கலைஞர் டிவியின் மூலமாகவே ஒளிபரப்பிக் கொள்ளலாம். இந்தப் படத்தை ஒளிபரப்புவதற்க்கா எந்த பணத்த்தையும் படத்தயாரிப்ப்பாளரிடமிருந்தோ, அந்த டிவியிலிருந்தோ கலைஞ்ர் டிவி பெற்றுக் கொள்ளாது. தமிழக மக்களின் ந்லனைக் கருத்தில் கொண்டு இந்த சேவையை இலவசமாகவே வழங்கும்

கல்வி நிகழ்ச்சிகள், வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சிகளை இனிமேல் ஜெயா டிவி ஒளிபரப்பும்.


இந்த சமச்சீர் கேபிள் டிவி திட்டத்தை மட்டும் அம்மா அறிமுகப் படுத்தி விட்டால் எல்லா நடுநிலையாளர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

Monday 6 June, 2011

இன்று தி மு க ஆட்சியில் இருந்திருந்தால்

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிசாமி ஆகியோர் மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக காலை 10 மணியளவில் தண்ணீர் திறந்து விட்டனர். பொதுப்பணித்துறை அமைச்சர் பூக்கள் தூவினார் என்று செய்திகள் சொல்லுகின்றன.
வழக்கமாக ஜூன்12க்கு பிறகு தான் திறக்கப் படும். சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக ஜுன்12க்கும் முன் திறந்தைருக்கிறார்கள்.

இப்போது திமுக ஆட்சி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கற்பனை.

சென்னையிலிருந்து மேட்டூர் வரை கட்சிக் கொடிகளும், கட் அவுட்களும் பற்ந்து கொண்டிருக்கும். அமைச்சர்பெருமக்கள் அனைவரும் அங்கே கூடி இருப்பார்கள். க்லைஞர் பிறந்த நாள் அன்று தண்ணீர் திறந்து விடப் பட்டிருக்கும். காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேட்டூருக்கு அழைத்து வரப் பட்டிருப்பார்கள்.

சுதந்திர இந்தியாவில் தண்ணீருக்கு சுதந்திரம் கொடுத்த தானைத் தலைவனை புகழ்ந்து வைரமுத்து கவிதை எழுதி வாசித்திருப்பார்.

உன்னிடம் கவிதை
ஊறுகிறது
உன்னாட்சியில்
நீரே ஊறுகிறது.

ஏனென்றால்
நீயே ஒரு ஊற்று
ஊற்றுக்கெல்லாம்
ஊற்று’
ஊருக்கெல்லாம்’
ஊற்று
என்று வாசித்திருப்பார்.

காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க இன்று இலவச நதிநீர் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என்று ஒரு அமைச்சர் வழ்ங்கிக் கொண்டிருப்பார்.

காவிரிப் படுகையில் விளையும் ஒவ்வொரு நெல்மணியும் கலைஞருக்கு நன்றியோடு இருப்பதாகவும் இந்த நெல்மணீயை சாப்பிடும் ஒவ்வொருவரும் கலைஞருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றும் இன்னொரு அமைச்சர் முழங்கிக் கொண்டிருப்பார்.

இதைவிட பிரமாண்டமாக எப்படி வைகை அணை திறப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

ம் வட போச்சே இப்ப பெருமூச்சு விட்டு என்ன பண்றது

Sunday 5 June, 2011

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!


பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.

எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?

கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு களுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது?

பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.


எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?

கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எப்படி கடன் வாங்குவது?

கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

எப்போது கடனை திரும்பக் கட்டுவது?

படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.

விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்!

கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.

கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.

பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.

இருப்பிடச் சான்றிதழ்.

பள்ளி மாற்று சான்றிதழ்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.

வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.


கவனத்தில் கொள்ள வேண்டியவை!

எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.

ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகை!

திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.


கடன் தர தயக்கம்

கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.

'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.

கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஒருவர்.

- செ.திருக்குறள் அரசி

* நாணயம் விகடன் 29-மே-2011


http://new.vikatan.com/article.php?mid=10&sid=188&aid=6663

பிறந்த நாள் செய்தி வேண்டுமா?

இப்போது ஃபேஸ் புக் ல இருந்தீங்கன்னா உங்க நண்பர்கள் எல்லோரும் உங்களுக்கு ஹாப்பி பர்த்டே போடுவாங்க. கொஞ்ச நேரத்தில பார்த்தா ஒரு பெரிய செலிப்ரட்டி ரேஞ்சுக்கு வாழ்த்துக்கள் வந்திருக்கும். நீங்களும் பதில் வாழ்த்து அதே நேஞ்சுக்கு சொல்லணும்னா கீழே இருக்கிறத உபயோகப் படுத்திகலாம். இதுக்கு சொந்தக் காரர் ஔவையார். அவர் வந்து ஒண்ணும் சொல்ல மாட்ட்டார்.


1.அறம் செய விரும்பு

  • நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்

  • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

  • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

  • ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

  • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்

  • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

  • கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி

  • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

  • யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

  • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

  • நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

  • ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்

  • அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

Saturday 4 June, 2011

பாபா ராம்தேவும், வெங்காய பாபாவும்

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் முன்வைக்கும் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை:

லோக்பால் மசோதாவை வலுவாக்கி,ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- அற்புதம் அப்படியே லஞ்சம் கொடுப்பவர்களையும் தூக்கில் போட வேண்டும்

* வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் மொத்தத்தையும் உடனடியாக மீட்பதுடன், உரிய வரிகளை வசூல் செய்ய வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- இதற்காக மந்திர தந்திரம் நிறைந்த சாமியார்கள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும்

* மீட்கப்படும் இந்தியர்களின் கறுப்பு பணம் மொத்தத்தையும் தேசிய சொத்தாக பிரகடனம் செய்ய வேண்டும்.

வெங்கயாததின் கருத்து:- ஆமாம் ஆனால் மடங்களில் இருக்கும் பணங்கள் எல்லாம் அறக்கட்டளைச் சொத்து என்று பெயரில் தேசிய சொத்தாக ஆக்கப் படும்

* ரூ.1,000, ரூ.500 கரன்சி நோட்டுகளை ரத்து செய்து ஒழித்திட வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- அதற்குப் பதிலாக 1,00,000, 50,000 நோட்டுக்கள் கொண்டு வர வேண்டும். காணிக்கைகள் பெற்றுக் கொள்வது அப்போதுதான் சுலபமாக இருக்கும்.

* தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்து, பிரதமரை வாக்காளர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வழிவகுக்க வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- அதே பொல் ஒவ்வொரு சட்டத்தையும் நிறைவேற்றும்போதும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

* குடிமக்கள் அனைவரும் தங்கள் ஆண்டு வருமான விவரத்தை சமர்ப்பிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- அதே போல் சாமியார்களுக்கு போடும் காணிக்கைக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்.

* நாடு தழுவிய அளவில் தொழிலாளர்களின் சம்பள விகிதம் ஒரே சீராக இருக்க வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- அனைத்து நடிகர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம். குறைந்தபட்சம் ஹீரோக்களுக்காவது. அனைத்து சாமியார்களுக்கும் ஒரே மாதிரி காணிக்கை விகிதங்கள்

* நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெற்று, தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் வாங்கக் கூடாது.

வெங்காயத்தின் கருத்து’- தொழிற்சாலைகளுக்கான நிலங்களை வானத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

* ஊழல் குற்றச்சாட்டுக்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பளித்திட, எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

* ஊழல்வாதிகளுக்கு உடக்குடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- ஊழல் என்றால் என்ன என்பதை முதலில் வரையறை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்,.

* தாய்மொழியிலேயே தொழிற்கல்வி படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வெங்காயத்தின் கருத்து:- யாராருக்கு எதுவெல்லாம் தாய்மொழி என்பதை ஒரு குழுவைத்து கண்டறீய வேண்டும்.

* பொதுச் சேவை உறுதிச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

வெங்கயாத்தின் கருத்து:-சாமியார்களின் சேவை அந்தரங்கச் சேவையா ? பொதுச் சேவையான்னு தெரியவில்லையே


* ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை முன்னிலைப்படுத்த வேண்டும்.


வெங்காயத்தின் கருத்து:- முன்னிலை இந்தின்னா தலைமையை தமிழுக்குக் கொடுப்பார்களா?


கோரிக்கைப் பட்டியல் வழங்க்கிய http://new.vikatan.com/news.php?nid=2235 க்கு நன்றி

Friday 3 June, 2011

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.

உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.

இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

கட்டுரையாளர்: எம். குப்புசாமி கால்நடை மருத்துவர்

நன்றி http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=425473&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.

உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.

இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

கட்டுரையாளர்: எம். குப்புசாமி கால்நடை மருத்துவர்

நன்றி http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=425473&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Wednesday 1 June, 2011

அதிமுக அரசு கொண்டாடும் கலைஞர் பிறந்த நாள்

கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3 என்பது அனைவரும் அறிந்த்தே. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு அனைவருக்கும் இலவச அரிசி திட்ட்த்தை இன்று அறிமுகப் படுத்தி இருக்கிறது. இந்த அரிசியை மாதம் முழுவதும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஜூம் 3ம் தேதி நடைபெறும் கூட்ட்த்தில் மேலும் பல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட உள்ளன. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தமிழ்க அதிமுக அரசு செய்யும் மரியாதையாக நாம் இதை எடுத்துக் கொள்ளலாம்.