கனிமொழி அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவரை சிறையில் அடைக்கவேண்டிய அவசியல் என்று கேட்டால் எதுவும் இல்லை. கலைஞர் டிவி வாங்கப் பட்ட பணம் லஞ்சப் பணம் என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. இருந்து விட்டுப் போகப் பட்டும்.
குற்றத்தை உறுதி படுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. ஆனால் விசாரணைக்காக வைத்திருக்கிறார்களாம். சிபிஐ கூப்பிட்ட போதெல்லாம் விசாரணைக்காக் வந்திருக்கிறார். இனியும் வருவேன் என்று உறுதி கூறுகிறார்.
வெளியில் விட்டால் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். கனிமொழியின் மேல் அக்கறை உள்ள யாருமே வெளியே இல்லாதமாதிரியும் அவர் வந்து தான் சாட்சிகளை கலைக்க வேண்டி வரும் என்றும் சொல்வது எந்த வகையில் சேர்த்தி!
2ஜி வழக்கில் இவரது பங்கு இங்கு மட்டும்தான் இருப்பதாகச் சொல்லும் சிபிஐ உறுதி செய்து தண்டனை வாங்கிக் கொடுப்பதை விட்டுவிட்டு ஏன் உள்ளேயே வைத்திருக்க வேண்டும்?
கனிமொழி வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கை விட்டு வெளியே வந்தபோது கனிமொழியை ஜாமீனில் வெளிவிடச் சொல்லி பெரிய இடத்து பிரஷ்ஷர் வந்ததால்தான் அவர்கள் ஒதுங்கினர் என்று சொல்லும் மனிதர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். கனிமொழியை வெளியெவிடக் கூடாது என்று சிலர் வற்புறுத்தியதால் மனம் இடம் கொடுக்காமல் விலகி இருக்கலாம் என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள்.
கலைஞர் மேலும் கனிமொழி மேலும் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கோபம் இருந்துவிட்டு போகட்டும். கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருப்பது ஏன் என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு ஒரே பதில்தான் தோன்றும். கலைஞரை, திமுக வை மிரட்ட, ஏன் மிரட்டவேண்டும்? பொதுவாக திராவிட மக்கள் என்றாலே காங்கிரசுக்கு ஒரு காட்டமான பார்வை இருக்கும்.
இது இல்லாமல் இன்றொன்றையும் கேளுங்கள். இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசில் முக்கிய முடிவுகள், டெண்டர்கள் காபினெட் அனுமதி இல்லாமல், பிரதமருக்குத் தகவல் தெரியாமல், முக்கியமாக அவர்களின் வழிகாட்டி சோனியாவுக்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா? ஒரு கக்கூஸ் காண்டிராக்ட் விடவே அந்தப் பகுதியில் உள்ள அனைத்து பெரும்புள்ளிகளும் தலையிடும்போது இந்த 2ஜி ஒதுக்கீடு இவர்களுக்கெல்லாம் தெரியாமல் போனதா? இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்க வேண்டியதுதானே? சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என்ற வாதத்தை வைக்க வேண்டியதுதானே?