Tuesday 30 August, 2011

அதிமுகவினரின் வயிற்றில் பாலை வார்த்த அம்மா

அவ்அம்மா எது செய்தாலும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்யறாங்க. குடியரசுத் தலைவரின் முடிவை மாநில அரசு மறு ஆய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதுங்கறத அழுத்தம் திருத்தமாச் சொல்றாங்க. கவர்னர் மனுவ நிராகரிச்சப்ப கலைஞர்தான் முதல்வர் அப்படிங்கறதயும் சொல்றாங்க. இருந்தாலும் தமிழ் நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுட்து அதுதாங்க தூக்குத் தண்டனை தமிழ் மக்களுக்கு மன வருத்தம் தருதுல்ல அதுனால தூக்குத் தண்டனையை குறைங்க அப்படின்னு தீர்மானம் போட்டு அனுப்பி இருக்காங்க.



பார்ப்போம். மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும் என்ன மாதிரி பதில் கொடுக்கறாங்கன்னு


தகவல் சோனியாஜிக்குப் போய் அவங்க பதில் எழுதி அதுக்கு நாலுபேர்க்கிட்ட பேசி அப்புறம்தான் எழுதுவாங்க, அந்த பதில் மத்திய அரசுக்கு வந்து அப்புறம் அவங்க பதில் சொல்லுவாங்க.


மாநில அரசு தீர்மானம் போட்டா மத்திய அரசு ஒத்துக்கணும்னு வழக்கறிஞர் வைகோ வேற சொல்லிட்டு இருக்கார்.

என்ன சொல்லப்போறாங்களோ

===============================================================

ராஜிவ் காந்தி உயிரோட வந்தா ஆயுள் தண்டனையா குறைக்கலாம்னு இளங்கோவன் சொல்றாரு. அது எப்படி? அவர் எங்க இருக்காரு தகவல் கொடுத்தாலாவது போய் கூட்டிட்டு வரலாம். இல்லை அவர் உயிரோடு வந்தால் இந்த வழக்குத்தான் எதற்கு?

அத வச்சுத்தான் தருமபுரி கட்சிக் காரங்க சந்தோஷப் படுவாங்களா இல்லையா அப்படிங்கறது தெரியும்.


===============================================================================

முதல்வருக்கே அதிகாரம் இருக்குன்னா அப்புறம் எதுக்கு வைக்கோ, நெடுமாறன் எல்லாம் குடியரசுத் தலைவர்கிட்ட கருணை மனுக் கொடுக்க ஐடியா கொடுக்கறாங்க. மேட்டரே இப்படியே ஒரு ஓரமா உட்கார்ந்து முடிச்சிட்டு போயிருக்கலாம்ல

Sunday 28 August, 2011

அம்மா எஸ்கேப் ஆயிடுங்க

தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒரு பிரச்சனையா மூன்று பேர் தூக்குத் தண்டனை பேசப் படுகிறது. நெடுமாறன், வைகோ வெல்லாம் அவங்க தூக்குத் தண்டனையை நிறுத்தனும்ணும் அதுக்கு முதல்வர் தலையிடணும்னு சொல்லிட்டு இருக்காங்க. முதல்வர் தலையிட்டு நிறுத்த முடியும்னா 20 வருஷத்தில சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் ஜெ அம்மாவுக்கு ஒரு தர்ம சங்கடம். தூக்கு வேண்டாம்னா மத்திய அரச பகைச்சிட்ட மாதிரி ஆயிடும். இப்படியே அமைதியா இருந்தா அது தூக்குக்கு ஒத்துகிட்ட மாதிரித்தான். ஈழத் தமிழர்களுக்கு எதிரி அப்படி கெளப்பி விட்டுடுவாங்க.

எனக்கு என்ன தோணுதுன்னா 1991 கொலைவழக்கு இன்னும் முடியல, அதில குற்றம் சாட்டப் பட்ட நிறையப் பேர் செத்துப் போயிட்டாங்க, இருக்கற கொஞ்சப் பேர வச்சுத்தான் அந்த கொலைவழக்கில இருக்கற மத்த ரகசியங்களை வெளியே கொண்டுவர முடியும் அதுனால கொலைவழக்கு முடியவரைக்கும் இவங்கள விசாரணைக்கு இருக்கற மாதிரி பார்த்துக்கறது அவசியம் அந்த வழக்கு முழுசும் முடியற வரைக்கும் நிறுத்தி வைங்கன்னா வடக்கயும் நல்ல பேர் வாங்கிக்கலாம். தெற்கேயும் எஸ்கேப் ஆகிக்கலாம்.

ஜெ அம்மா என்ன ஐடியாவில இருக்காங்களோ யாருக்குத் தெரியும்

அப்துல் கலாம எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க

வலைப் பக்கங்களில் நிறைய எழு்தறவங்க எழுதிக்கிட்டெ இருக்காங்க. நடக்கற நிகழ்ச்சி்களொட அவங்க அவங்க கற்பனையும் ேர்த்து எழுதிக்கிட்டு இருக்காங்க. அன்னா ஹசாராவ ஆதரிக்கறத பத்தி ஒருத்தர் ஒரு இடு்கை எழுதி இருந்தாரு. நம்ம கண்லயும் பட்டது http://vettipaechchu.blogspot.com/2011/08/blog-post.html

அதுல பார்த்தா

/
/நமது தமிழ்நாட்டில் பிறந்து மிகப் பெரும் அறிவாற்றல் பெற்று, எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் ஒரு பெரும் பதவியிலோ அல்லது தானே தனியாக ஒரு தொழிலதிபராகவோ பரிமளித்திருக்கக்கூடிய தகுதி பெற்றும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி அனைத்து இந்தியனும் தலை நிமிர்ந்து நிற்கும்படிக்கு உலக அரங்கிலே இந்தியாவை உயர்த்தியவர்; வலுவான இந்து மதக் கோட்பாட்டையே தனது கட்சியின் செல்வாக்கைப் பெருக்க பிரச்சாரம் செய்து வந்த ஒரு இந்துக் கட்சியே, இஸ்லாமியரான இவரை நாட்டின் மிகப் பெரும் பதவியான இந்திய ஜனாதிபதியாக அமர்த்தி அழகுபார்க்கும் படி உயர்ந்தவர்; குழந்தைகளையே எதிர்கால இந்தியாவாக பாவித்தவர்; சாதி, மதம், கட்சி, கொள்கை என்று இல்லாமல் இந்தியாவைப் பார்த்தவர்; நமது நாட்டைத் தாயாக பாவித்தவர், மாபெரும் மனிதர், இளைஞர், டாக்டர். அப்துல் கலாம் சொன்னாரே, ‘இளைஞர்களே.. கனவு காணுங்கள்..’ என்று..//


அப்படி இப்படின்னு புகழ்ந்து எழுதிட்டு அதுனால நாடு உருப்படணும்ன்னா அன்னா ஹசாராவ ஆதரிங்கன்னு எழு்தி யிருந்தாரு. மேலோட்டமா பார்த்தா அப்துல் கலாம் ஆதரவு பெற்ற வேட்பாளர் அன்னா ஹசாரேவ ஆதரிங்கன்னு ஓட்டுக் கேட்கறமாதிரி எழுதி இருந்தாரு. நானும் எதார்த்தமா பின்னூட்ட்த்தில
ஏனுங்க அபதுல் கலாம் நல்லாத்தான இருக்காரு ஒரு ஃபோனப் போட்டோ நேர்ல போயோ நீங்க ஏனுங்க ஊழலை ஒழிக்கற அன்னாவுக்கு ஆதரவு கொடுக்கலேன்னு ேளுங்கன்னு
கேட்டேன். அவரு வலைப்பூ வேற பின்னூட்ட மட்டறுத்தல் பண்ணி வச்சிருக்கற இடம் அப்படிங்கறதால கொஞ்ச நேரம் கழிச்சு வந்திடும்ன்னு நினைச்சா நம்ம பின்னூட்த்த வெளியிடவே இல்லை.

நீங்க சொல்லுங்க, அப்துல் கலாம் ஃபோட்டோ போட்டு அன்னா ஹசாராவுக்கு ஆதரவு கேட்கற ஆள்கிட்ட நான் கேட்ட்து தப்பா?

அப்துலகலாம் நம்ம ஊர்லயே இருக்கும்போதே அவர் போட்டோ போட்டு அன்னாவுக்கு ஆதரவு தேடுறாரே இது சரியா?

Friday 26 August, 2011

அம்மாடி ஆத்தாடி

அன்னாஹசாரேவின் போராட்டத்துக்குச் செய்யப்படும் செலவுகள் கடந்த முறை செலவு செய்யப்பட்டதைவிட அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். போராட்ட அமைப்பாளர்கள் இவர்களுக்கு போராட்ட விளக்க கையேடுகளையும், சிறிய புத்தகங்களையும் வழங்கி வருகின்றனர்.

மைதானத்துக்குள் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வாடகை தவிர படுக்கைகள், வாகனங்கள் ஆகியவையும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் சாப்பாடு, குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக தினமும் ரூ. 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவில் அமைப்பாளர்களின் செல்போன் கட்டணமும் அடங்கும்.


அன்னாஹசாரே கடந்த ஏப்ரல் மாதம் ஜந்தர்மந்தரில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது மொத்தம் 32.70 இலட்சம் செலவானதாகக் கூறப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர்தான். ஆனால் தற்போதைய போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த முறை உண்ணாவிரதத்தின் செலவு கடந்தமுறையைவிட அதிகமாக இருக்கும்.


ராம்லீலா மைதானத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்ககூடிய உணவு கவுண்டர்களை திறந்துள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் மூலம் வாரத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர டெல்லி மாநகராட்சியின் தொழிலாளர்கள் சங்கமும் ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி உள்ளன.

பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச மருத்துவ சோதனை மையங்களை திறந்துள்ளது. தேவையானவர்களுக்கு முதலுதவி அளிப்பதுடன் மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.


உண்ணாவிரத வளாகத்துக்குள் 6 நடமாடும் கழிவறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேனிலும் 12 கழிவறைகள் உள்ளன. ஆனால் அங்கு கூடும் கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.


இதய சிறப்பு நிபுணர் டாக்டர் நரேஷ் கிரேஹன் நடத்தும் மெடான்டா அதி நவீன ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.


தனியார்கள் தவிர அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையிலும், மேடைக்கு அருகிலும் “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உண்ணாவிரத காட்சியை டெல்லி போலீசார் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.


உண்ணாவிரதம் நடைபெறும் இடம் அருகே வாகனங்கள் வந்து செல்வது அதிகரித்துள்ளதால், ராம்லீலா மைதானம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் விற்பனையாகும் பெட்ரோலின் அளவு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 லிட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.

நன்றி:-http://www.inneram.com/2011082118506/hazares-fast-fuelling-profits-at-this-petrol-pump

அன்னா தான் இனி எல்லாம்

ஊழல் இல்லாத நாட்டில்தான் மக்கள் வாழ முடியும். ஊழலை ஒழிப்பு மசோதா தாக்கல் செய்த பின்புதான் சிங்கப்பூர் மக்கள் வரிக் கட்டாமல் அமைதியாக வாழுகிறார். அங்கு ரோடுகள் பளபளக்கின்றன். மக்கள் நிறைய சம்பாதித்து சந்தோஷமா வாழ்றாங்க. இனி இந்தியாவும் இப்படித்தான். அன்னா ஹசாராவின் போராட்டம் மாபெரும் வெற்றி அப்படின்னு டைம் ஆஃப் இண்டியாவே போட்டுட்டாங்க, இந்தியாவுக்கு டைம் சூப்பர்.

இதையெல்லாம் வாங்கிக் கொடுத்த அன்னா ஹசாராவுக்கு நாம் உரிய கவுரவம் கொடுத்தே ஆகணும். அதுக்கு ஒரே வழி அவரை தேசப் பிதா என்று அறிவிப்பதுதான். ஏன்னா

1. காந்தி தலைமையில் ஒரு கூட்டமே போராடினார்கள். இங்கு அன்னா தனி ஆளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.

2.காந்தி போலவே எந்தக் கட்சியிலும் தேர்தலிலும் நிற்காதவர். அவர் போலவே வேகமாக நடக்கக் கூடிய்வர்.

3.காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரம் ஊழலுக்கு வழிவகுத்தது. அன்னா வாங்கிக் கொடுத்திருக்கும் சுதந்திரம் ஊழல் இல்லாத வரிகட்டத் தேவையில்லாத சுதந்திரம்.

4.காந்தி எந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் நான் இறந்தாலும் சுதந்திரப் போர் நடக்கும் என்றோ சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் நான் சாக மாட்டேன் என்றோ சொன்னதில்லை. அதாவது எப்போதுமே அவர் உயிரைப் பணயம் வைத்ததில்லை. அன்ன்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் சாகமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

5.அன்னாவின் போராட்டாத்திற்கு எல்லா உயிர்களும் கலந்து கொள்கின்றன.

6. காந்தியின் போராட்டத்தில் சக மக்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுத்ததில்லை. ஆனால் அன்னா ஹசாராவின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எந்த சங்கடங்களும் வராமல் பார்த்துக் கொள்ள பல லட்சங்கள் செலவிடப் படுகின்றன.


அதனால் இனிமேல் அன்னா ஹசாரேதான் இனி தேசப் பிதா. அவர்தம் தொண்டர்களை வேண்டுமானால் இனிமேல் பிதா மகன்கள் என்று அழைத்துக் கொள்ளலாம்.

Thursday 25 August, 2011

கேள்விக்கு ஒருவர் இல்லை

அண்ணா ஹசாரே ஆதரவுக் குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கும் அதேநேரத்தில், நாடாளுமன்ற வாசலில் இந்திய மக்களின் உணவைக் கெடுக்காதே என்கிற எதிர்ப்புக்குரலுடன் கிரீன்பீஸ் ஆர்வலர்கள் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்க.ளில் ஒன்றுதான் "இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்' மசோதா

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உழவர் பாதுகாப்பு என்ற பெயரில் திமுக அரசால் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது நினைவு இருக்கலாம். அந்த மசோதாவுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளில் முக்கியமான ஒன்று வேளாண் பயிற்சி தொடர்பானது. விவசாயிகளுக்கு வேளாண் முறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லித்தரும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு அனுமதி பெற்ற நபர் அல்லது நிறுவனம்தான் செய்ய முடியும் என்கிற வகையில், நுட்பமாக வரையறுக்கப்பட்ட அந்த மசோதாவை இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்த்தார்கள்.

÷இப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வைக்கப்போகும் இந்திய உயிரி - தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா, தமிழக அரசு மசோதாவில் இருந்த ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை இன்னும் கடுமையாக, ஆனால் வேறுவிதத்தில் முன்வைக்கிறது. இந்த மசோதாவில் மிகப்பெரும் ஆட்சேபத்துக்குரியதாக இரண்டு பகுதிகளை கிரீன்பீஸ் ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்:

÷""....... உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள் அல்லது தாவரத்தின் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல், மக்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டுசெல்லும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டுவரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் விதிக்கப்படும்.....'' என்கிற இந்த நிபந்தனை மக்களிடம் மரபீனி மாற்றப்பட்ட விதைகள், காய்கனிகள், வேளாண் விளைபொருள்கள் குறித்த தீமைகளைப் பேசுவதையே மறைமுகமாகத் தடைசெய்கிறது.

÷அறிவியல் ஆதாரங்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் மாறுபடுபவை. பன்னாட்டு மென்பானங்களில் நச்சுத்தன்மை உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லும் முடிவுக்கு, "அனுமதிக்கப்படும் அளவு'க்கு உள்ளாகத்தான் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது அரசு. இந்த அனுமதிக்கப்பட்ட அளவு அமெரிக்காவில் ஒரு விதமாகவும், இந்தியாவில் வேறு விதமாகவும் இருக்கிறதே, அது ஏன் என்று கேள்வி கேட்பாரில்லை. இப்போதுள்ள கருத்துரிமைப்படி ஒரு வேளாண் பொருளில் நச்சுக்கலப்பு உள்ளது என்று சொல்வதற்காவது உரிமை உள்ளது. அதனை முற்றிலுமாக இந்த மசோதா பறித்துவிடும். மரபீனி மாற்றப்பட்ட உற்பத்திப் பொருள்களால் விளையும் எல்லா தீமைகளும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறது என்பதாக அரசு சொல்லும்போது, இதைப்பற்றி பேசுவதே தண்டனைக்குரியது. அப்படியானால், எப்படி மக்களிடம் இதைக் கொண்டுசெல்வது? தவறுகளைத் தட்டிக் கேட்கக் கூடாதா? மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாதா? வல்லான் வகுத்ததுதான் சட்டமா?

÷""......அரசு அனுமதித்துள்ள தாவரம் அல்லது உயிரி - தொழில்நுட்பம் சார்ந்த பொருளை அனுமதியின்றி பரிசோதனைக்கு உள்படுத்துவது (கிளீனிக்கல் டிரையல்) தண்டனைக்குரியது. இக்குற்றத்தைச் செய்பவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் தண்டனையாக விதிக்கப்படும்.....'' என்கிற நிபந்தனைகள், யாருக்காக, யாரைத் திருப்திப்படுத்த அல்லது பாதுகாக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை.

அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் இந்தப் பொருள்களைத் தனியார் அமைப்புகளும் இயற்கை ஆர்வலர்களும் பரிசோதிக்க முடியும். ஒரு விளைபொருளை அல்லது உயிரிப் பொருளைப் பரிசோதிக்கவும் அரசின் அனுமதி பெற வேண்டும் என்றால், இந்தியாவில் மக்களாட்சிதான் நடக்கிறதா என்கிற சந்தேகமல்லவா எழுகிறது. இவர்கள் தொழுதடிமை செய்து வணங்கும் அமெரிக்கத் திருநாட்டில் இப்படி எல்லாம் தடை இல்லையே. அங்கே தரப்படும் சுதந்திரமும் உரிமையும் இங்கே மட்டும் தட்டிப் பறிக்கப்படுகிறதே, ஏன்?

÷மசோதாவின் இத்தகைய பிரிவுகள் முழுக்கமுழுக்க, மரபீனி மாற்றுப்பயிர்களில் (ஜி.எம். புராடக்ட்ஸ்) ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலால் செருகப்பட்ட நிபந்தனைகள்தான் இவையெல்லாம் என்பதுதான் போராட்டம் நடத்தும் இயற்கை ஆர்வலர்களின் கருத்து. ஆனால், இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தாகிவிட்டது. இப்போது, அண்ணா ஹசாரே விவகாரத்தால் மக்களின் மனமும், ஊடகங்களின் கவனமும் வேறுதிசையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் சந்தடி சாக்கில் விவாதம் இல்லாமலேயே இந்த மசோதா நிறைவேறும் அபாயம் நிறையவே இருக்கிறது. இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடுகிறது என்பதுடன் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் துறை தலையிட முடியாததாகவும் உள்ளது.

÷ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி உற்பத்தியில் மரபீனி விதைகள் இந்திய மண்ணில் வேரூன்றிவிட்டன. 2009-10-ம் நிதியாண்டில் 2.43 லட்சம் குவிண்டால் பி.ட்டி. பருத்தி சந்தைக்கு வந்தது, 2010-11-ம் நிதியாண்டில் 2.60 லட்சம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது. இப்போது வடமாநிலங்களில் பி.ட்டி மக்காச்சோளம் விதைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன மரபீனி மாற்றுப்பயிர் நிறுவனங்கள். பி.ட்டி. கத்திரிக்காய் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் பிரச்னையைப் பற்றி அண்ணா ஹசாரேயிடம் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் அவரைச் சுற்றி யாரும் இல்லையே, என்ன செய்வது? விவசாயியான அவரிடம் எடுத்துச் சொன்னால் ஒருவேளை "லோக்பால்' மசோதாவைக் கைவிட்டுவிட்டு இதற்கு முன்னுரிமை கொடுத்தாலும் வியப்பில்லை.


thankshttp://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=466236&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Wednesday 24 August, 2011

இரண்டாம் சுதந்திரம் இரண்டுநாளில் வந்து விடும்

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா பயனித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இரண்டாவது சுதந்திரம் நமக்குக் கிடைத்து விடும், அன்னா ஹசாரா மற்றும் இரண்டு பூசன்கள் அவர்தம் நண்கள் லோக்பால் அமல்படுத்தி விடுவார்கள். இனிமேல் அனைத்து அரசு அலுவகங்கள், அமைச்சர்கள் அனைவரும் அடங்கி நடந்தாக வேண்டும் . லஞ்சம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் இனி இவர்கள் அடக்கி விடுவார்கள். சுப்ரீம் கோர்ட்க்கு போறேன்னு யாரும் சொல்ல முடியாது. மக்கள் மெழுகுசிந்தி வாங்கிய இரண்டாம் சுதந்திரத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. கவர்மெண்ட்டும் சரி, கவர்மெண்ட் டுல வேலை செய்யரவங்களும் சரி. இனி மக்களுக்கு அடங்கித்தான் ஆகணும். இனிமேல் கவர்மெண்ட் மாப்பிள்ளைக்குத்தான் பொண்ணுக் கொடுப்பேன் எவனும் சொல்ல மாட்.டான்.



இதெல்லாம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு.

அப்புறம் இவர்களே அடுத்தல் லோக்பால் கட்டப் பஞ்சாயத்து ஆட்களை நியமித்துக் கொள்வார்கள். நாட்டாமை தம்பி, அடுத்த நாட்டாமை ஆகிவிடுவார். பாவம் அண்ணா ஹசாரா நாட்டாமையோட தம்பிகள் எல்லோரும் அவரது தம்பியாகி விடுவார்கள். ரூபாய் நோட்டுல வாழுறாரு அண்ணா, எல்லோரும் சொன்னா அப்படின்னு அவர் பேர்ருல ஒரு பாட்ட போட்றுவாங்க.

நாட்டில் உள்ள ஐ.ஜி, ஐ.ஏ.எஸ் ஆட்கள் எல்லோரும் புது நாட்டாமைகளுக்கு பயந்து தான் வாழ்வாங்க. ஏன்னா அவங்கதான் சூப்பர் கோர்ட், அவங்க தண்டனையும் கடுமையா இருக்கும். ஒரு பெட்டிசன் போயாச்சு, அதை அவங்க பார்த்து தீர்ர்புக் கொடுத்தா மனோரமாகூட வந்து நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு சொல்ல முடியாது. அதுனால எல்லோருமே அவங்களுக்கு பயந்துதா இருப்பாங்க.

அதுல ஒண்ணு ரெண்டு பேர அப்ப இருக்கற பெரிய பெர்ரிய மஃபியா குரூப் மக்கள் மிரட்டியோ, பண ஆசை காட்டியோ அவங்க கைக்குள்ள கொண்டுவந்திருவாங்க. புள்ளைய கடத்தி வச்சிக்க்ட்டு மிரட்டினா என்ன பண்றது? பிடிக்காத கலெக்டர், ஐஜிய எல்லாம் ஊழல் பண்ணீட்டாங்கன்னு டிஸ்மிஸ் பண்ண சொல்வாங்க. பெட்டிசனையும் இவங்க்ளே போட்டுடுவாங்க. அப்புறம் என்ன நல்லவன் எல்லாம் உள்ள போய்டுவான். மஃபியா குரூப்புக்கு கப்பம் கட்டுறவன் மட்டும்தான் பதவில இருக்க முடியும். கப்பம் கட்டுறவன் அத வசூல் பண்ண ஆரம்பிப்பான். அத அதுக்கு கரப்சன், ஊழல் இப்படியெல்லாம் யாராவது பேர வச்சா ஒரு பெட்டிசன், ஒரு என்கொயரி, அப்படியே கட்டம் கட்டி தூக்கி போட வேண்டியதுதான்.

இந்த நேரத்தில் இன்னொரு அன்னா ஹசாரா (இந்த இடத்தில் இன்னொரு காந்தின்னு சொல்லக் கூடாது, ஏன்னா அவர் வாங்கிக் கொடுத்தது குவாட்டர் சுதந்திரம்) வந்து மெழுவர்த்தி மாதிரி போராட்டம் பண்ணா ஆரம்பிச்சாங்கன்னு வையிங்க, அவர் மேல்யும் ஒரு க்ஞ்சா கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவ்வாங்க. இன்ஸ்பெக்டர் மாட்டேன்னு சொன்னா அவர் மேல் கரப்சன் கேஸ் போட்டு அவரை தூக்கிடுவாங்க. பேப்பர் , மீடியா அப்படி யாராவது போன அதை எதிர்க்க அவங்களே பேட்டா டிவி, பேட்டா பேப்பர், பேட்டி இண்டர்நெட் இப்படி ஏதாவது வச்சு நீயூஸ் வராம ஒரே ஒரு அமுக்கு. மொத்தத்திலே வர்ர் செய்திகள் எல்லாம் இந்த் நாட்டு மக்கள் சுதந்திரமாக லஞ்சம் இல்லாமல் வாழ்கிறார்கள். நேர்ர்மையாக வாழ்கிறார்கள் இப்படியே சொல்லிட்டு போகும்.

டிஸ்கி: மஃபியா கும்பலுக்குத்தான் சம்பாதிக்கும் ஆசை வரணும்னு இல்லை, யார்ய்க்கு வேணும்னாலும் வரலாம். எப்ப வேணும்னாலும் வரலாம்.

Sunday 21 August, 2011

அன்னா ஹசாராவும் கூட்டல் கணக்கும்

நாட்ல என்ன நடக்குதுண்ணேபுரியல, ஓட்டுப்போட வர மாட்ேன்னு சொன்ன பசங்க எல்லாம் ஆளுக்கு ஒரு மெழுவர்த்திய தூக்கி வச்சிக்கிட்டுப்போராட்டம் பண்ேன்னு சொல்றாங்க, அன்னா ஹசாரா அமெரிக்கா ஆளு, இல்ல பி ஜெ பி ஆளு அப்படி இப்படின்னு ஜல்லி அடிக்கற ஆளுங்களுக்கு இருக்காங்க.

நானும் இதப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அன்னா ஹசாரா வளர்ந்தா கண்டிப்பாக காங்கிரசுக்கு கட்சிக்கு கஷ்டம்தான். அடுத்த பிரதமாரா சோனியாோ , ராகுோ வருவ்து கஷ்டம். மன்மோகனும் பதவிபிரமானம் எடுக்கறது கஷ்டம். அப்ப காங்கிரசுக்கு ஆப்புத்தானா அப்படின்னு நினைச்சா, அன்னா ஹசாரா வராட்டியும் காங்கிரஸ் கட்சி படுோல்வி அடையத்தான் போகுது . அப்பா அன்னா ஹசாரா வந்தா டெபாஸிட் கூட கிடைக்காதா அப்படின்னு யோ சிச்சா, அப்படி எல்லாம் இல்லை. நம்ம ஊர்ல மெழுவர்த்தி குருப் பசங்க ேஸ்புக்ல போட்டோ போடத்தான் இதெல்லாம் பண்றாய்ங்க. வேற ஒண்ணும் ஆயிடப் போவதில்லை.


ஆனா பாருங்க, காங்கரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே அன்னா ஹசாரா பக்கம் போய் விடும்ல. அப்ப மத்த கட்சிகள்ளாம் கோரஸ் பாட போய்விட வேண்டியதுதான? அப்ப நாளைக்கு நாட்ல ரெண்டு கட்சிதான் இருக்கும். சோனியா காந்தி கட்சி, இன்னொன்னு அன்னா காந்தி கட்சி,

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு கரெக்ட்டாதான் வருது


எளியவன் புரியல அப்படின்னு சொல்றாரு, நான் என்ன சொல்றேன்னா, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு அப்ப்டியே பிஜேபி பக்க ம் போயிட கூடாது அப்படிங்கறதுக்காக அன்னா ஹசாராவ காங்கிரஸே கிளப்பி விட்டு இருக்காதான்னு கேட்கிறேன். அப்ப நாளைக்கு பிஜேபி ஒண்ணுமே பண்ணலேன்னு ஆயிடும்ல, நாளைக்கு எலெக்ஸன்னு வந்தா காங்கிரஸ்தானே ஆட்சியப் பிடிக்கும்.


இண்ட்லில சேர்த்தாச்சு, ஆனா ஓட்டு எண்ணிக்கை கீழே தெரிய மாட்டாங்குது. ஓட்டு போட நினைக்கறவங்க கிளிக் பண்ணினா ஓட்டு சேர்ந்திடும்.

சூடான பகுதில சேர்த்த தமிழ்வெளிக்கு நன்றி

Thursday 18 August, 2011

மண்ணுக்குள் இருக்கும் பெருச்சாளி, மண்ணை ஆளுமா?

http://www.vikatan.com/news/images/muthu1(4).jpgஇந்த கேலிச் சித்திரத்தைப் பார்த்த உடன் தோன்றும் சில உண்மைகள்.

1. படத்தில் இருக்கும் மனிதருக்கு சில பெருச்சாளிகள் தொந்தரவு கொடுக்கின்றன.

2.பந்தலைப் பார்த்தால் அந்த பெருச்சாளிகள் உண்ணாவிரதம் இருக்கின்றன.

3.அதில் ஒரு பெருச்சாளி மிகக் கடுமையாக தொந்தரவு கொடுக்கிறது

4.பூனை வந்து சேர்ந்தால் மட்டுமே இந்த பெருச்சாளிகளை கட்டுப் படுத்த முடியும்.

5.பெருச்சாளிகளின் குணம் அது இருக்கும் இடத்தையும், அங்குள்ள பொருட்களையும், விளைச்சலையும் தனியே எடுத்துப் போய் அனுபவிக்கும் குண்ம உடையவை.