Wednesday 24 August, 2011

இரண்டாம் சுதந்திரம் இரண்டுநாளில் வந்து விடும்

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா பயனித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இரண்டாவது சுதந்திரம் நமக்குக் கிடைத்து விடும், அன்னா ஹசாரா மற்றும் இரண்டு பூசன்கள் அவர்தம் நண்கள் லோக்பால் அமல்படுத்தி விடுவார்கள். இனிமேல் அனைத்து அரசு அலுவகங்கள், அமைச்சர்கள் அனைவரும் அடங்கி நடந்தாக வேண்டும் . லஞ்சம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் இனி இவர்கள் அடக்கி விடுவார்கள். சுப்ரீம் கோர்ட்க்கு போறேன்னு யாரும் சொல்ல முடியாது. மக்கள் மெழுகுசிந்தி வாங்கிய இரண்டாம் சுதந்திரத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. கவர்மெண்ட்டும் சரி, கவர்மெண்ட் டுல வேலை செய்யரவங்களும் சரி. இனி மக்களுக்கு அடங்கித்தான் ஆகணும். இனிமேல் கவர்மெண்ட் மாப்பிள்ளைக்குத்தான் பொண்ணுக் கொடுப்பேன் எவனும் சொல்ல மாட்.டான்.



இதெல்லாம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு.

அப்புறம் இவர்களே அடுத்தல் லோக்பால் கட்டப் பஞ்சாயத்து ஆட்களை நியமித்துக் கொள்வார்கள். நாட்டாமை தம்பி, அடுத்த நாட்டாமை ஆகிவிடுவார். பாவம் அண்ணா ஹசாரா நாட்டாமையோட தம்பிகள் எல்லோரும் அவரது தம்பியாகி விடுவார்கள். ரூபாய் நோட்டுல வாழுறாரு அண்ணா, எல்லோரும் சொன்னா அப்படின்னு அவர் பேர்ருல ஒரு பாட்ட போட்றுவாங்க.

நாட்டில் உள்ள ஐ.ஜி, ஐ.ஏ.எஸ் ஆட்கள் எல்லோரும் புது நாட்டாமைகளுக்கு பயந்து தான் வாழ்வாங்க. ஏன்னா அவங்கதான் சூப்பர் கோர்ட், அவங்க தண்டனையும் கடுமையா இருக்கும். ஒரு பெட்டிசன் போயாச்சு, அதை அவங்க பார்த்து தீர்ர்புக் கொடுத்தா மனோரமாகூட வந்து நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு சொல்ல முடியாது. அதுனால எல்லோருமே அவங்களுக்கு பயந்துதா இருப்பாங்க.

அதுல ஒண்ணு ரெண்டு பேர அப்ப இருக்கற பெரிய பெர்ரிய மஃபியா குரூப் மக்கள் மிரட்டியோ, பண ஆசை காட்டியோ அவங்க கைக்குள்ள கொண்டுவந்திருவாங்க. புள்ளைய கடத்தி வச்சிக்க்ட்டு மிரட்டினா என்ன பண்றது? பிடிக்காத கலெக்டர், ஐஜிய எல்லாம் ஊழல் பண்ணீட்டாங்கன்னு டிஸ்மிஸ் பண்ண சொல்வாங்க. பெட்டிசனையும் இவங்க்ளே போட்டுடுவாங்க. அப்புறம் என்ன நல்லவன் எல்லாம் உள்ள போய்டுவான். மஃபியா குரூப்புக்கு கப்பம் கட்டுறவன் மட்டும்தான் பதவில இருக்க முடியும். கப்பம் கட்டுறவன் அத வசூல் பண்ண ஆரம்பிப்பான். அத அதுக்கு கரப்சன், ஊழல் இப்படியெல்லாம் யாராவது பேர வச்சா ஒரு பெட்டிசன், ஒரு என்கொயரி, அப்படியே கட்டம் கட்டி தூக்கி போட வேண்டியதுதான்.

இந்த நேரத்தில் இன்னொரு அன்னா ஹசாரா (இந்த இடத்தில் இன்னொரு காந்தின்னு சொல்லக் கூடாது, ஏன்னா அவர் வாங்கிக் கொடுத்தது குவாட்டர் சுதந்திரம்) வந்து மெழுவர்த்தி மாதிரி போராட்டம் பண்ணா ஆரம்பிச்சாங்கன்னு வையிங்க, அவர் மேல்யும் ஒரு க்ஞ்சா கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவ்வாங்க. இன்ஸ்பெக்டர் மாட்டேன்னு சொன்னா அவர் மேல் கரப்சன் கேஸ் போட்டு அவரை தூக்கிடுவாங்க. பேப்பர் , மீடியா அப்படி யாராவது போன அதை எதிர்க்க அவங்களே பேட்டா டிவி, பேட்டா பேப்பர், பேட்டி இண்டர்நெட் இப்படி ஏதாவது வச்சு நீயூஸ் வராம ஒரே ஒரு அமுக்கு. மொத்தத்திலே வர்ர் செய்திகள் எல்லாம் இந்த் நாட்டு மக்கள் சுதந்திரமாக லஞ்சம் இல்லாமல் வாழ்கிறார்கள். நேர்ர்மையாக வாழ்கிறார்கள் இப்படியே சொல்லிட்டு போகும்.

டிஸ்கி: மஃபியா கும்பலுக்குத்தான் சம்பாதிக்கும் ஆசை வரணும்னு இல்லை, யார்ய்க்கு வேணும்னாலும் வரலாம். எப்ப வேணும்னாலும் வரலாம்.

2 comments:

மதுரை சரவணன் said...

vaalththukkal

வெங்காயம் said...

நன்றி மதுரை சரவணன். இந்த வாழ்த்டு இரண்டாம் சுதந்திர போருக்காகவா?

Post a Comment