அதுல பார்த்தா
/
/நமது தமிழ்நாட்டில் பிறந்து மிகப் பெரும் அறிவாற்றல் பெற்று, எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் ஒரு பெரும் பதவியிலோ அல்லது தானே தனியாக ஒரு தொழிலதிபராகவோ பரிமளித்திருக்கக்கூடிய தகுதி பெற்றும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி அனைத்து இந்தியனும் தலை நிமிர்ந்து நிற்கும்படிக்கு உலக அரங்கிலே இந்தியாவை உயர்த்தியவர்; வலுவான இந்து மதக் கோட்பாட்டையே தனது கட்சியின் செல்வாக்கைப் பெருக்க பிரச்சாரம் செய்து வந்த ஒரு இந்துக் கட்சியே, இஸ்லாமியரான இவரை நாட்டின் மிகப் பெரும் பதவியான இந்திய ஜனாதிபதியாக அமர்த்தி அழகுபார்க்கும் படி உயர்ந்தவர்; குழந்தைகளையே எதிர்கால இந்தியாவாக பாவித்தவர்; சாதி, மதம், கட்சி, கொள்கை என்று இல்லாமல் இந்தியாவைப் பார்த்தவர்; நமது நாட்டைத் தாயாக பாவித்தவர், மாபெரும் மனிதர், இளைஞர், டாக்டர். அப்துல் கலாம் சொன்னாரே, ‘இளைஞர்களே.. கனவு காணுங்கள்..’ என்று..//
அப்படி இப்படின்னு புகழ்ந்து எழுதிட்டு அதுனால நாடு உருப்படணும்ன்னா அன்னா ஹசாராவ ஆதரிங்கன்னு எழு்தி யிருந்தாரு. மேலோட்டமா பார்த்தா அப்துல் கலாம் ஆதரவு பெற்ற வேட்பாளர் அன்னா ஹசாரேவ ஆதரிங்கன்னு ஓட்டுக் கேட்கறமாதிரி எழுதி இருந்தாரு. நானும் எதார்த்தமா பின்னூட்ட்த்தில
ஏனுங்க அபதுல் கலாம் நல்லாத்தான இருக்காரு ஒரு ஃபோனப் போட்டோ நேர்ல போயோ நீங்க ஏனுங்க ஊழலை ஒழிக்கற அன்னாவுக்கு ஆதரவு கொடுக்கலேன்னு ேளுங்கன்னுகேட்டேன். அவரு வலைப்பூ வேற பின்னூட்ட மட்டறுத்தல் பண்ணி வச்சிருக்கற இடம் அப்படிங்கறதால கொஞ்ச நேரம் கழிச்சு வந்திடும்ன்னு நினைச்சா நம்ம பின்னூட்த்த வெளியிடவே இல்லை.
நீங்க சொல்லுங்க, அப்துல் கலாம் ஃபோட்டோ போட்டு அன்னா ஹசாராவுக்கு ஆதரவு கேட்கற ஆள்கிட்ட நான் கேட்ட்து தப்பா?
அப்துலகலாம் நம்ம ஊர்லயே இருக்கும்போதே அவர் போட்டோ போட்டு அன்னாவுக்கு ஆதரவு தேடுறாரே இது சரியா?
No comments:
Post a Comment