இதையெல்லாம் வாங்கிக் கொடுத்த அன்னா ஹசாராவுக்கு நாம் உரிய கவுரவம் கொடுத்தே ஆகணும். அதுக்கு ஒரே வழி அவரை தேசப் பிதா என்று அறிவிப்பதுதான். ஏன்னா
1. காந்தி தலைமையில் ஒரு கூட்டமே போராடினார்கள். இங்கு அன்னா தனி ஆளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
2.காந்தி போலவே எந்தக் கட்சியிலும் தேர்தலிலும் நிற்காதவர். அவர் போலவே வேகமாக நடக்கக் கூடிய்வர்.
3.காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரம் ஊழலுக்கு வழிவகுத்தது. அன்னா வாங்கிக் கொடுத்திருக்கும் சுதந்திரம் ஊழல் இல்லாத வரிகட்டத் தேவையில்லாத சுதந்திரம்.
4.காந்தி எந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் நான் இறந்தாலும் சுதந்திரப் போர் நடக்கும் என்றோ சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் நான் சாக மாட்டேன் என்றோ சொன்னதில்லை. அதாவது எப்போதுமே அவர் உயிரைப் பணயம் வைத்ததில்லை. அன்ன்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் சாகமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
5.அன்னாவின் போராட்டாத்திற்கு எல்லா உயிர்களும் கலந்து கொள்கின்றன.
6. காந்தியின் போராட்டத்தில் சக மக்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுத்ததில்லை. ஆனால் அன்னா ஹசாராவின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எந்த சங்கடங்களும் வராமல் பார்த்துக் கொள்ள பல லட்சங்கள் செலவிடப் படுகின்றன.
அதனால் இனிமேல் அன்னா ஹசாரேதான் இனி தேசப் பிதா. அவர்தம் தொண்டர்களை வேண்டுமானால் இனிமேல் பிதா மகன்கள் என்று அழைத்துக் கொள்ளலாம்.
1 comment:
நல்ல ஒப்பீடு.
www.panangoor.blogspot.com
Post a Comment