தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒரு பிரச்சனையா மூன்று பேர் தூக்குத் தண்டனை பேசப் படுகிறது. நெடுமாறன், வைகோ வெல்லாம் அவங்க தூக்குத் தண்டனையை நிறுத்தனும்ணும் அதுக்கு முதல்வர் தலையிடணும்னு சொல்லிட்டு இருக்காங்க. முதல்வர் தலையிட்டு நிறுத்த முடியும்னா 20 வருஷத்தில சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் ஜெ அம்மாவுக்கு ஒரு தர்ம சங்கடம். தூக்கு வேண்டாம்னா மத்திய அரச பகைச்சிட்ட மாதிரி ஆயிடும். இப்படியே அமைதியா இருந்தா அது தூக்குக்கு ஒத்துகிட்ட மாதிரித்தான். ஈழத் தமிழர்களுக்கு எதிரி அப்படி கெளப்பி விட்டுடுவாங்க.
எனக்கு என்ன தோணுதுன்னா 1991 கொலைவழக்கு இன்னும் முடியல, அதில குற்றம் சாட்டப் பட்ட நிறையப் பேர் செத்துப் போயிட்டாங்க, இருக்கற கொஞ்சப் பேர வச்சுத்தான் அந்த கொலைவழக்கில இருக்கற மத்த ரகசியங்களை வெளியே கொண்டுவர முடியும் அதுனால கொலைவழக்கு முடியவரைக்கும் இவங்கள விசாரணைக்கு இருக்கற மாதிரி பார்த்துக்கறது அவசியம் அந்த வழக்கு முழுசும் முடியற வரைக்கும் நிறுத்தி வைங்கன்னா வடக்கயும் நல்ல பேர் வாங்கிக்கலாம். தெற்கேயும் எஸ்கேப் ஆகிக்கலாம்.
1 comment:
உங்க ஐடியாவும் கரெக்டு தான்!ஒர்க் அவுட் ஆவுமா?
Post a Comment