Sunday 30 October, 2011

இனியாவது ரோஷம் வருமா?

எனக்கொரு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு திமுக காரங்க மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் மேட்டர் ஏன் இன்னும் காங்கிரஸோட காலடியில் திமுக இருக்காங்க அப்படிங்கறதுதான்.

ஆட்சி பிடிக்க, பதவிய காப்பாத்திக்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுவும் போச்சு.

கனிமொழிய காப்பாத்த அப்படின்னு சொன்னாங்க புடிச்சு உள்ள வைச்சு பல நாள் ஆச்சு, ஒண்ணும் நடக்கறமாதிரி தெரியல. பேச நானும் தியாகிதான் நானும் தியாகிதான் சொல்லிட்டு அன்னா ஹஜாரே மாதிரி இனிமேல் சிறையில்தான் இருப்பேன். ஜாமீன் கிடைச்சாகூட வெளிய வரமாட்டேன். குற்றவாளி இல்லைன்னு முடிவு வந்தபிறகுதான் வெளிய வருவேன்னு தைரியமா சொல்லிகிட்டு இருக்கலாம். ஏற்கனவே கல்லக்குடி போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம். ஓடுற ரயில்பாதையிலயே தலை வச்ச அப்பா, அம்மாவோட ரத்தம் ஓடுற ஆள்தான் தைரியத்துக்கு குறைச்சல் இருக்காது. ஜாமின் கிடைச்சதுன்னா வெளிய வந்திரலாம். அது வரைக்கும் பில் டப்லயே இருக்கலாம். அதுவும் பண்ண மாட்டேங்கறாங்க.

அழகிரி மத்திய அமைச்சரா கொஞ்ச நாளைக்கு இருந்திட்டு போறாருன்னு சொன்னா அவர் அமைச்சரா இருக்கறதால ஒரு நன்மையும் இருக்கறமாதிரி தெரியல. அம்மா அவர தொரத்து தொரத்து தொரத்தராங்க . இப்ப என்னடான்னா அஜித் சிங் கூட கூட்டணி போடணும் அப்படிங்கறதுக்காக அழகிரியோட துறையையும் புடிங்கிடுவாங்க போல இருக்குது.

உள்ளாட்சித் தேர்தல்ல தனியா நின்னு மிரட்டுனாங்கன்னு பார்த்தா அவங்கதான் கூட்டணிக்கு வராம தனியா போன மாதிரி ஆயிட்டுச்சி. இவரு திரும்பவும் போய் டெல்லில சமாதானம் பேசிட்டு வராரு.

என்ன கொடுமை இது? ஒரு டெட்ர் இப்படின்னு டெயில் எண்ட்டர் மாதிரி பயந்து நடுங்கறது அவருக்கு மட்டுமிலல. அவர் வாழற தமிழ்நாட்டுக்கே அசிங்கம். இன்னும்கூட ரோஷம் வரலேன்னா எப்படி?

1 comment:

SURYAJEEVA said...

அது வராது... வராதுன்னு சொல்றோமில்ல இன்னும் ஏன்யா எதிர்பாத்துகிட்டு இருக்க...

Post a Comment