பாருங்க பாஸ், உள்ளாட்சித் தேர்தல்ல அதிமுக பெரிய வெற்றி அடைந்தாலும் திமுக ஒரு மூணில ஒரு பாகம் ஜெயிச்சிருக்காங்க பாஸ். திமுக ஜெயிச்ச இடங்கள் பார்த்தீங்கன்னா ஒரு உண்மை தெரியும். பெரும்பாலும் பழைய அமைச்சர்களோட நெருக்க்கமான ஆட்கள் தோத்து போயிருக்காங்க. அதே நேரத்தில் நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க. காங்கிரஸ் கூட்டணிய கழட்டி விட்ட பிறகும், ஆளுங்கட்சி ஜெயிச்சாத்தான் ஊருக்கு சலுகை கிடைக்கும் என்ற எண்ணத்திற்கும் மேலாக சட்ட மன்ற தேர்தல விட இந்த தேர்தல்ல திமுக அதிகமா ஓட்டு வாங்கி இருக்காங்க.
திருச்சி இடைத்தேர்தலிலும் கூட கொஞ்சம் தான் ஓட்டு கொறச்சிருக்கு. நேரு ஜெயிச்சா சட்டசபைக்கு போகவே மாட்டார். பெரும்பாலும் வெளிநடப்புதான். இல்லையின்னா உள்நடப்புன்னு தெரிஞ்சும். காங்கிரஸ், பாமக ஓட்டுக்கள் இல்லாமலே போன தேர்தல்ல விட இப்ப கொஞ்சம்தான் ஓட்டு கொறைஞ்சிருக்கு. ஒருவேளை நேருவிக்கு பதிலா யாராவது மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிக் காரங்க யாரையாவது போட்டு இருந்தா திருச்சில ஜெயிச்சுக் கூட இருக்கலாம். திமுக விட இந்த உள்ளாட்சித் தேர்தல் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கழட்டிவிட்டு, அவங்கள் எதிர்க்க ஆரம்பிக்கணும். 2ஜி ஊழல்ன்னு சொல்றதுல நடந்தது என்ன? ஏன் இப்படின்னு திமுக காரங்கள மாட்டிவிட்டிருங்காங்க அப்படின்னு ஊருக்குச் சொல்லணும். காங்கிரஸ் கட்சிய அழிக்கணும்னா அது திமுகவால மட்டும்தான் முடியும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு
10 comments:
ஹ ஹா நல்லா வருதுங்க சிரிப்பு
Ha.Ha.
நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க.
Live examples please
ஒங்க பக்கத்துக்கு சரியாதான் பேரு வச்சுருக்கீங்க. நல்லா யோசிகிராங்கயா..
//suryajeeva said...
ஹ ஹா நல்லா வருதுங்க சிரிப்பு//
சந்தோஷம்
//Ashwinji said...
Ha.Ha.//
ஹி ஹி
//Prakash said...
Good One//
நன்றி
//ராம்ஜி_யாஹூ said...
நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க. //
தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வ தளத்திற்குச் சென்று பெயர்களை தெரிந்து கொள்ளலாம்
//காரிகன் said...
ஒங்க பக்கத்துக்கு சரியாதான் பேரு வச்சுருக்கீங்க. நல்லா யோசிகிராங்கயா..//
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே, காரியத்தில் கைவையடா தாண்டவக்கோனே
கணக்கு போட்டு பார்த்தால், யோசிக்க வைக்கும் உண்மைதான் நீங்க சொல்லியிருப்பதும்.
Post a Comment