ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே நிட்கட்டுமே, என்ன பலம், எவ்வளவு பலம்ன்னு தெரிஞ்சிக்கிட்டும். போன உள்ளாட்சி தேர்தல்ல கேப்டன் தனியா நின்னுதானே அத்தனை கவுன்சிலர் போஸ்ட் ஜெயிச்சாரு. அதை பார்த்துத்தானே அம்மா, வைகோவையே கழட்டி விட்டாங்க. இன்னைக்கு கேப்டன் அமைச்சர் பதவிய விட பவரான பதவில இருக்கார். இந்த தேர்தல்ல கம்யூனிஸ்ட்டுங்க எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு செல்வாக்கு இருக்குன்னு சொல்றாங்கல்ல அதையும்தான் பார்ப்போம்.
தனித்தனியா நின்னாங்கன்னு வைங்க, திமுக, அதிமுக நல்லா ஜெயிச்சு வருவாங்க. ஆளுங்கட்சி அதுனால் ஆளுங்கட்சி காரு ஜெயிச்சா நல்லதுன்னும் சிலர் நினைக்க்லாம். கேப்டன் போன உள்ளாட்சிலயே தன்னோட பலத்தை காட்டி இருக்காரு. அதைவிட ரெண்டு மூனு கவுன்சிலர் போஸ்ட் கூட ஜெயிக்கலாம். ஜாதிக்கட்சி ஆளுங்கல்லாம் அவங்க இருக்கற பகுதிலயே மண்ணக் கவ்வுவாங்க பாருங்க. அடுத்த தேர்தல்ல நான் நாலுகோடி பேர்ருக்கு தலைவன்னு எந்த ஜாதி ஆளும் சொல்ல முடியாதுல்ல, கம்யூனிஸ்ட் பவரும் தெரிஞ்சி போயிரும்.
காங்கிரஸோட பவர், போங்க பாஸ் ராஜினாமா பண்ணின தலைவர்ருக்க்கு பதிலா அடுத்த ஆளு போட வே ஆள் இல்லாம திண்டாடுறாங்க அவங்க வந்து கவுன்சிலர் எலக்சன்ன்ல நின்னு ஜெயிச்சு, பார்ப்போம். கேப்டன கரெக்ட் பண்ணி ஏதாவது ஒண்ணு ரெண்டு சீட் செயிக்கலாம்னு ட்ரை விடறாங்க போல, அதுக்கு சில பத்திரிக்கைகலும் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. அப்படி சேர்ந்தா கேப்டன், சிரஞ்சீவிய விட படு பரிதாபமா போயிடுவார் பாருங்களேன். எப்படியோ கலைஞர் சொன்னத ஜெ, முதலான எல்லாத் தலைவர்களும் கேட்டுக்கிட்டா ஒரிஜினல் ஜனநாயகம் ஓரளவு டெவலப் ஆயிடும்ல அதுவரைக்கும் ஹேப்பிதான்.
No comments:
Post a Comment