Thursday, 29 September 2011

பதிவுலகில் அன்னா ஹஜாரே

ரெண்டாம் சுதந்திரப் போரை முன்னோக்கி நடத்தி வரும் அன்னா ஹஜாரே அவர்கள் இப்ப பிளாக்கர், ஃபேஸ் புக் , டிவிட்டர் எல்லாத்திலும் ஒரு அக்கவுண்ட் ஓபென் செய்து நாடு முழுக்க சுதந்திர உணர்ச்சிய ஊட்டிக்கிட்டு இருக்காராம். ஏற்கனவே நமெல்லாம் பதி வுலகில் உட்கார்ந்து நாட்டு எவ்வள்வோ நன்மைசெய்ய முயற்சி செய்துக்கி ட்டு இருக்கோம். இப்ப அன்னா வும் சேர்ந்திக்கிட்டாருல்ல, இனிமேல் நாட்டு ரெண்டாம் சுதந்திரப் போர், மூணாம் சுதந்திரப் போர் அப்படி இப்படின்னு ஒரே அலப்பரை கிளப்பப் போகுது.

பதிவுலகில் ஐடியா மணி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற பதிவர்களின் டவுசரை அன்னா ஹஜரே கிளிப்பார் என்பது உறுதி, ஆனால் அவர் தமிழ் மணம், இண்ட்லியில் சேர்ந்திட்டாரான்னு தெரியல, தெரியலன்னா என்ன அன்னா பதிவ நாம் சேர்த்துவோம்.

ஏற்கனவே ஃபேக் ஐ பி எல் பிளேயர் அப்படின்னு ஒருத்தர் ஒரு ப்ளாக ஆரம்பிச்சு வெகு சீக்கிரத்தில் நிறைய ஃபாளோயர் அப்புறம் ஹிட்ஸ் வாங்கிக் குவிச்சாருல்ல அவரை அன்னா பீட் பண்ணிருவாருன்னு நினைக்கிறேன்

ஜெய்ஹிந்த்., ஓ சாரி சாரி
\வந்தே மாதரம்

https://annahazaresays.wordpress.com வேணும்னா ஒரு எட்டு எட்டிப் பார்த்திடுங்க.

1 comment:

Post a Comment