Sunday, 30 October 2011

கணவனில்லாதவளின் குழந்தை

இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி வந்தது. திருமணமான புது மாப்பிள்ளை ஏரியில் மூழ்கி இறந்து விட்டாராம். என்ன கொடுமை பாருங்கள். இனி அந்தப் பெண்ணின் கதி? சில நாள் குடும்பம் நடத்தியதில் ஒரு வேளை குழ்ந்தை உருவாகி இருந்தால் அந்தக் குழந்தை இனி தகப்பன் இல்லாத குழந்தைன்னுதான் சொல்வாங்க.

இதுக்கெல்லாம் தான் என்ன தீர்வுன்னு யோசிச்சு பாருங்க. சுலபமா ஒரு தீர்வு இருக்குங்க. ஏரிகளையெல்லாம் மூடிட்டா போதுங்க. ஏற்கனவே கல்பாக்கத்தில் ஏரி இருக்கு. தாராப்பூர்ல ஏரி இருக்குன்னு சொல்றாங்க. சொல்லிட்டுப்போறாங்க. இங்க ஏதாவது மாப்பிளை விழுந்து செத்தா என்ன நடக்கும் யோசிச்சுப் பாருங்க.

வாங்க நாம ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்போம். ஏரிகளை மூடச்சொல்லுவோம். பயமே படாதீங்க. யாராவது வந்தால் அவங்க வீட்டுப் பொண்ணு இப்படி நின்னா என்ன பண்ணுவீங்கண்ணு கேட்போம். கண்டிப்பா ஒத்துவிக்குவாங்க. இனிமேல் மாப்பிள்ளையோட உயிர் உத்தரவாதமா இருக்கும்ம்னு நம்பிக்க்லாம்.

இனியாவது ரோஷம் வருமா?

எனக்கொரு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு திமுக காரங்க மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் மேட்டர் ஏன் இன்னும் காங்கிரஸோட காலடியில் திமுக இருக்காங்க அப்படிங்கறதுதான்.

ஆட்சி பிடிக்க, பதவிய காப்பாத்திக்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுவும் போச்சு.

கனிமொழிய காப்பாத்த அப்படின்னு சொன்னாங்க புடிச்சு உள்ள வைச்சு பல நாள் ஆச்சு, ஒண்ணும் நடக்கறமாதிரி தெரியல. பேச நானும் தியாகிதான் நானும் தியாகிதான் சொல்லிட்டு அன்னா ஹஜாரே மாதிரி இனிமேல் சிறையில்தான் இருப்பேன். ஜாமீன் கிடைச்சாகூட வெளிய வரமாட்டேன். குற்றவாளி இல்லைன்னு முடிவு வந்தபிறகுதான் வெளிய வருவேன்னு தைரியமா சொல்லிகிட்டு இருக்கலாம். ஏற்கனவே கல்லக்குடி போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம். ஓடுற ரயில்பாதையிலயே தலை வச்ச அப்பா, அம்மாவோட ரத்தம் ஓடுற ஆள்தான் தைரியத்துக்கு குறைச்சல் இருக்காது. ஜாமின் கிடைச்சதுன்னா வெளிய வந்திரலாம். அது வரைக்கும் பில் டப்லயே இருக்கலாம். அதுவும் பண்ண மாட்டேங்கறாங்க.

அழகிரி மத்திய அமைச்சரா கொஞ்ச நாளைக்கு இருந்திட்டு போறாருன்னு சொன்னா அவர் அமைச்சரா இருக்கறதால ஒரு நன்மையும் இருக்கறமாதிரி தெரியல. அம்மா அவர தொரத்து தொரத்து தொரத்தராங்க . இப்ப என்னடான்னா அஜித் சிங் கூட கூட்டணி போடணும் அப்படிங்கறதுக்காக அழகிரியோட துறையையும் புடிங்கிடுவாங்க போல இருக்குது.

உள்ளாட்சித் தேர்தல்ல தனியா நின்னு மிரட்டுனாங்கன்னு பார்த்தா அவங்கதான் கூட்டணிக்கு வராம தனியா போன மாதிரி ஆயிட்டுச்சி. இவரு திரும்பவும் போய் டெல்லில சமாதானம் பேசிட்டு வராரு.

என்ன கொடுமை இது? ஒரு டெட்ர் இப்படின்னு டெயில் எண்ட்டர் மாதிரி பயந்து நடுங்கறது அவருக்கு மட்டுமிலல. அவர் வாழற தமிழ்நாட்டுக்கே அசிங்கம். இன்னும்கூட ரோஷம் வரலேன்னா எப்படி?

Wednesday, 26 October 2011

கலைஞர் என்னும் பொதுநலவாதி

தமிழ்கத்திற்கு பிரயோஜனம் நிறைந்த கலைஞ்ரின் டெல்லி பயணம்

1. கூடங்குளம் அணுமின் நிலையம்,
2.இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம்,
3. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது,
4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது,

ஆகிய முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி கலைஞர் அவர்கள் பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் சோனியாவை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.

அதே நேரத்தில் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய ரெண்டு அமைச்சர்கள் பற்றியோ எம்.பி.கனிமொழி ஜாமின் பற்றியோ பேசவில்லை.

பாருங்களேன். என்ன ஒரு பொறுப்புணர்ச்சி. தமிழக மக்கள் அவரது பதவியைப் பிடுங்கி உள்ளாட்சிகளில் அதகளம் பண்ணியபிற்கும் கூட தமிழ்க மக்களுக்காக உழைக்கிறார். பிரதமரிடம் நாடுநிலைமை பற்றி பேசுகிறார். கூட்டணிக் கட்சி தலைவரிடம் அவரது உடல் நிலமை பற்றி மட்டும் பேசிவிட்டு வருகிறார். அவரது கட்சி நலம் பற்றியோ குடும்ப நலம் பற்றியோ எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் மட்டும் செலவளித்துள்ளார்.

**********************************************************
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
************************************************************

இதையெல்லாம் தமிழ்நாட்டில் நேற்றுப் பிறந்த குழந்தை கூட நம்பாது. எதுக்காக இப்படியெல்லாம் பூசி மெழுகறாங்கன்னே தெரியல.
மத்திய அரசு கூட்டணில இருக்கறதால கலைஞ்ர்க்கோ, கட்சிக்கோ எந்த ஒரு நன்மையும் இருக்கறதா தெரியல. குறைஞ்சது போலிஸ் கேஸாவது இல்லாம பாத்துக்காவங்கன்னு பார்த்தா அதெல்லாம் அவங்களோட தூண்டல்னால் நடக்கறமாதிரியே இருக்கு.
இல்ல காங்கிரஸுக்கு பயங்கர ஓட்டு வங்கி இருந்து அவங்க இருந்தாதான் தமிழ்நாட்டில் ஆட்சிய புடிக்கமுடியும்ன்னுநினைச்சா அதுவும் இல்லைன்னு ஆயிறுச்சி.

பொதுநலனுக்காக சிந்திக்கறவங்கதான் ஆட்சிக்கு வரணும். குறைந்த் பட்சம் சுயநலமா சிந்திச்சா தான் குடும்பத்தக் காப்பாத்த முடியும். இவங்க சுயநலமாவும் இருக்க தெரியல. பொதுநலத்துக்காக செயல் படுறதப் பத்தி கேட்கவே வேண்டாம்.

பேசாம ஒவ்வொரு நாளும் சிறையில் இருப்பதைப் பற்றி லைவ் டெலிகாஸ்ட் போட்டு அதையே ஒரு போராட்டம் மாதிரி காட்டி ஒரு பில்டப் கொடுக்கலாம். நூறாவது நாள் கொண்டாடலாம்.

திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.

Tuesday, 25 October 2011

வேலாயுதம் ஒருஜினல் தீபாவளி?

விஜயின் வேலாயுதம் படம் பார்த்தீங்கண்ணா அவரோட அரசியல் பிரவேசத்திற்கும் படத்தோட பேருக்குமே நெருங்கிய ஒற்றுமை இருக்கறமாதிரி இருக்குங்க.
மொதல்ல விஜய் திமுக அனுதாபியா இருந்தார். ஸ்டாலின் மேல இருக்கற பற்று காரணமா இளைய தளபதின்னு பேரு கூட தனக்குத்தானே வச்சிக்கிட்டு இருந்தார். அந்தக் காலத்திலயே படத்தில ஒரு பாட்டுப் பாடி இந்தப் பாடலைப் பாடியவர் இளைய தளப்தின்னு போடச் சொல்லி அத டிவியில ஒளிபரப்பி ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தார். உதயான்னு ஒரு படம் கூட எடுத்தார். திமுக் அரசாங்கம் மூலமா நன்கொடை எல்லாம் கொடுத்தார்.

அதற்கப்புறம் திமுகவுல் உள்ளவர்களுக்கு அவருக்கும் என்னவோ பிரச்சனைகள் சொல்லிக்கிட்டாங்க. அவர் படமே ரிலிஸ் ஆக போச்சு. அப்புறம் அம்மாவ சந்திச்சாரு. அப்படி இப்படின்னு காவலன் ரிலீஸ் பண்ணீனாரு. தேர்தல்ல அவங்க அப்பா அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தாரு. அதிமுக செயித்தவுடனே ஒரு சூப்பரா ஒரு ட்ரெயிலர வேலாயுதம் படத்துக்கு எடுத்து ரிலீஸ் ப்ண்ணினாரு.



====================================================

புராணக் கதைல பாத்தீங்கண்ணா அப்பா சிவபெருமானோட மகன் முருகன். சிவ்பெருமானோட வரம் பெற்ற ஆட்கள் சூரன் குரூப்ஸ் இம்சை தாங்க முடியாம போச்சு. அப்பானால அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமை. இப்பத்தான் அம்மா எண்ட்ரி கொடுக்கறாங்க. அப்பாவோட புள்ளைக்கு தன்னோட சக்திய திரட்டி ஆயுதமா தர்ராங்க. அதுதான் வேலாயுதம். அத பயன்படுத்தி முருகன் சூரன் பிரதர்ஸை அழிச்சர்ராரு. இதுதான் வேலாயுதம் கதை. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு ஒற்றுமை ஓடிக்கிட்டே இருக்கு பாத்தீங்களா.

சோ வேலாயுதம் கண்டிப்பா வெற்றித்தான்னு நினைக்கறீங்களா


ஆனா பாத்தீங்கண்ணா இன்னைக்கு தீபாவளி. தீபாவளி ஏன் கொண்டாடரோமுன்னா ம்கன் பண்ற இம்சை தாங்கமுடியாத அம்மா அவங்களே டைரக்டா வந்து கதையை முடிக்கறாங்க. என்னமோ தீடின்னு இந்தக் கதை ஞாபகம் வந்து தொலைக்குது.

காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைச்சத விட வேலாயுதம் படத்துக்கு சாதா தியெட்டர்களாதான் கிடைச்ச மாதிரி தோணுது. ஏம்பாஸ். ஏதாவது தீபாவளி ஆகிப் போயிட்யுமா?

Sunday, 23 October 2011

திமுக, திரும்ப வருவோம்ல

பாருங்க பாஸ், உள்ளாட்சித் தேர்தல்ல அதிமுக பெரிய வெற்றி அடைந்தாலும் திமுக ஒரு மூணில ஒரு பாகம் ஜெயிச்சிருக்காங்க பாஸ். திமுக ஜெயிச்ச இடங்கள் பார்த்தீங்கன்னா ஒரு உண்மை தெரியும். பெரும்பாலும் பழைய அமைச்சர்களோட நெருக்க்கமான ஆட்கள் தோத்து போயிருக்காங்க. அதே நேரத்தில் நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க. காங்கிரஸ் கூட்டணிய கழட்டி விட்ட பிறகும், ஆளுங்கட்சி ஜெயிச்சாத்தான் ஊருக்கு சலுகை கிடைக்கும் என்ற எண்ணத்திற்கும் மேலாக சட்ட மன்ற தேர்தல விட இந்த தேர்தல்ல திமுக அதிகமா ஓட்டு வாங்கி இருக்காங்க.

திருச்சி இடைத்தேர்தலிலும் கூட கொஞ்சம் தான் ஓட்டு கொறச்சிருக்கு. நேரு ஜெயிச்சா சட்டசபைக்கு போகவே மாட்டார். பெரும்பாலும் வெளிநடப்புதான். இல்லையின்னா உள்நடப்புன்னு தெரிஞ்சும். காங்கிரஸ், பாமக ஓட்டுக்கள் இல்லாமலே போன தேர்தல்ல விட இப்ப கொஞ்சம்தான் ஓட்டு கொறைஞ்சிருக்கு. ஒருவேளை நேருவிக்கு பதிலா யாராவது மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிக் காரங்க யாரையாவது போட்டு இருந்தா திருச்சில ஜெயிச்சுக் கூட இருக்கலாம். திமுக விட இந்த உள்ளாட்சித் தேர்தல் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கழட்டிவிட்டு, அவங்கள் எதிர்க்க ஆரம்பிக்கணும். 2ஜி ஊழல்ன்னு சொல்றதுல நடந்தது என்ன? ஏன் இப்படின்னு திமுக காரங்கள மாட்டிவிட்டிருங்காங்க அப்படின்னு ஊருக்குச் சொல்லணும். காங்கிரஸ் கட்சிய அழிக்கணும்னா அது திமுகவால மட்டும்தான் முடியும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

கேப்டன் பார்க்க வேண்டிய வீடியோ

கருப்பு எம்ஜியார் தனது வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி பார்த்து இருக்கார். அவர் திரும்பவும் வளர்ச்சி பாதையில் திரும்ப இந்த வீடியோ காட்சியப் பார்த்தாலே போதும். இதப் புரிஞ்சி அரசியல் நடத்தினா அடுத்த பத்து, பதினைந்து வருஷங்களுக்கு பா.ம.க. நிலைமையில் நிற்கலாம். இல்லைன்னா, இப்ப பாமக நிலைமைக்கே போய் விடுவார். ஆல் தி பெஸ்ட் கேப்டன்

Sunday, 16 October 2011

புரட்சித் தலைவன் ஆ.ராசா

ஊழல் ஊழல்ன்னு பேசுவாங்க பாஸ், உலகத்தில பல ஊழல்கள் நடந்திருக்கு. அமெரிக்காவுல நடந்திருக்கு, ரஷ்யாவில நடந்திருக்கு, வெளிய தெரிஞ்சு ஆட்சியே மாறிப் போயிருக்கு. ஊழல்ண்ணா என்ன நடக்கும். பொதுமக்களுக்காக செய்ய வேண்டிய வேலைய தனக்கு வேண்டியவங்களுக்குக் கொடுத்து அதன் மூலமா பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள்ல மேக்ஸிமம் தன்னோட பாக்கெட்டுக்கு கிடைக்கறமாதிரி பண்ணிக்குவாங்க. அதனால அந்த திட்டம் சீரளிஞ்சு போயிடும். ஒரு சிலர் போணாப் போகுதுண்ணு ஒரு 10% பொதுமக்களுக்கு கிடைக்கற மாதிரி பண்ணுவாங்க.

ஆனா பாருங்க பாஸ். இந்த 2ஜி ,மேட்டருல நடந்ததா சொல்ல காலத்துக்கு முன்னாடி நமக்கு பெரு நகரங்கல்ல மட்டும் செல்ஃபோன் கனெக்‌ஷன் இருந்திச்சு. சிருநகரங்கள்ல கிடைக்க ஆரம்பிச்சிட்டு இருந்திச்சு. நிறைய அலைக் கற்றை கையில இருந்திச்சு. வந்தவங்களுக்கெல்லாம் டக் டக்ன்னு கொடுத்த பின்னாடி இப்ப பாமர மக்கள்ட்டயும் செல்ஃபோன் வ்ந்திருச்சு, குக்குக் கிராமங்களுக்கு கூட செல்ஃபோன் இருக்கு. எழுதப் படிக்க தெரியாதவங்க கிட்டக் கூட செல்ஃபோன் இருக்கு, யூஸ் பன்றாங்க.

இந்த மாதிரி ஒரு புரட்சி ஏற்படுத்தனவங்கள் பாராட்டாம புடிச்சு உள்ள போட்டு வச்சிருக்காங்க. நாலு பேருக்கு நல்லது நடந்திருக்கு. அப்பாவி மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இப்படி கொடுத்த அலை கற்றை கைமாறி வேற கம்பெணிக்கு போனாக்கூட ஈஸியா கண்டுபிடிக்கற வசதி இருக்கு. அப்புறம் என்ன பாஸ். ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிட முடியும். 120 கோடி மக்கள் ரஸ்க் சாப்பிட வச்சிருக்காங்க. அப்புறம் ஏன் பாஸ் ஊழல் ஊழல்ன்னு சொல்றாங்க.

நிதியமைச்சருக்கு முறைப்படி சொல்லியிருக்காங்க. பிரதமர்ட்ட ஆலோசனை வாங்கி இருக்காங்க. அப்புறம் எங்க ஊழல் வந்திச்சு.

ஆடிட் பார்ட்டி எழுதியிருக்காங்க லட்சம் கோடி வருமான இழப்பு அப்படின்னு. அது எப்படின்னா நீ நல்லாப் படிச்சு பிளேஸ்மெண்ட் ஆனா சிவாஜிமாதிரி ஃபாரின்போயி 200 கோடி சம்பாரிச்சிருக்கலாம் அப்படிங்கற மாதிரி எழுதி இருக்காங்க. அப்படியெல்லாம் ஏழம்போட்டிருந்தா கிராமத்துக்கெல்லாம் எப்படி பாஸ் ஃபோன் கிடைச்சிருக்கும்.

இவங்க ரொம்ப சீப்பா கொடுத்ததாலதான பாஸ் நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்த ஃபோன் பில் இப்ப ரொம்ப கொரைஞ்சு போயி இருக்கு. ஏழம் போட்டு ரேட்ட்ட ஏத்தி விட்டுருந்தா நமக்கும் ஃபோன் பில் ஏறி இருக்காதா பாஸ்?

அப்புறம் ஏன் பாஸ் ராசாவ புடிச்சு உள்ள வெச்சிக்கிட்டு விசாரிச்சிக்கிட்டே இருகாங்க.

Saturday, 8 October 2011

கட்டபொம்மன் வசனம் உண்மைதான் - ஆதாரத்துடன்

கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!


இடுகை பதில் இடுகைதான் இது. கட்டபொம்மனைப் பற்றி அவதூறு சொல்வது போல எழுதப் பட்டு இருக்கிறது. கொஞ்சம் அறிவே இல்லாமல், சொறனை இல்லாமல் யோசிக்காமல் எழுதப் பட்டு இருக்கிறது. கண்டிப்பாக எதுகை மோனையோடு பேசியிருக்க மாட்டார்தான்.


ஆனால் அவர் காரசாரமாகப் பேசியதால்தான் கோட்டையிலேயே அவரை தங்க (சிறை ) வைக்கப்பட்டார். அங்கு கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை இடுகையாளர் ஒத்துக் கொள்கிறார். இதுவே கட்ட்பொம்மன் வீரன் தான் என்பதற்கு உதாரணம். ஜாக்சனின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு கட்ட பொம்மனைப் பற்றி பேசுவது காமெடியோ காமெடி. அதற்கு பிரபல பதிவர்கள் சைங் சக் வேற.. வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னோட ஒரு பக்கத்து மீசையை எடுத்திட்டுப் போய்ட்டான்னா எழுதி வைச்சிருப்பான்.

நல்லாப் பாருங்க. நாட்ல் பல புரட்சி வீரர்கள கொலை காரார்களாக, கொள்ளைக் காரர்களாக, கற்பழிப்பு வாதிகளாக , கஞ்சா கடத்துபர்களாக கேஸப் போட்டு தூக்குல போடுவதுதான் உலக வழக்கம். நம்ம வீரர்களைப் பத்தி இதுக்கும் மேலயும் எழுதி வைச்சிருப்பாங்க. படிச்சிட்டு மத்தவஙககிட்ட பேசறதுக்கு முன்னாடி கொன்சூடு யோசிங்கப்பூ

Wednesday, 5 October 2011

இனிமேல் நான் அன்னா ஹஜாரே ஆதரவாளன்

நான் அண்ணா ஹஜாராவை ஆதரிக்க தொடங்கிவிட்டேன்.

ஏன்ன்னா

1.அவர் தேர்தல்ல போட்டியிடமாட்டேன்னு சொல்லிட்டார்.

2.ஆனா காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்லிட்டார்.

3.அவர் உண்ணாவிரதம் இருந்தாலே அங்கு வரப்போற மக்களுக்கு நல்ல பொழுது போக்கு தீனி கிடைக்கும் இனி இவர் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சா ம்க்களுக்கு எவ்ளோ பொழுது போக்கு, எவ்ளோ தீனி. ம்க்கள் பணம் மக்களுக்காக தண்ணி மாதிரி செலவு செய்ய ஆரம்பிச்சிருவாங்க

4.எடியூரப்பா, மோடி மாதிரி ஆட்களை பகைச்சிக்க விரும்பல. இது போன தேர்தல்ல வடிவேலு பாணி. (அவர் கடைசி வரைக்கும் அம்மாவை திட்டல) நம்ம ஊர் கார ஃபாலோ பண்றவர நாமதான ஊக்கம் கொடுக்கணும்.

5அவர் போற வார எடத்துக்கெல்லாம் கைமுறுக்கு, சிப்ஸ், மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்கள் விற்பனை பெருகும். அதுனால் சிறு தொழில்களும் வளரும்.

6.ராகுல் காந்தி மாதிரி வளர்ந்து வரும் ஒரு மாபெரும் தலைவருக்கு தினமும் அறிக்கை கொடுப்பது, பதில் கொடுப்பது மாதிரி பயிற்சி அளித்து வருகிறார். அதனால் அவர் எதிர்காலத்தில் அமெரிக்கா, சீனா விவகாரங்களில் பதில் சொல்லும்போது ஓரளவு தேறி விடுவார்.

7.இளைய தளபதி விஜயின் ஆதரவு அன்னா ஹஜாராவேவுக்கு இருக்கு அதனால் பன்ச் டயலாக பிண்ணி எடுப்பார். ஏற்கனவே விஜய் பின்பற்றி வரும் மகேஷ் பாபுவின் வழியும் பன்ச் வழிதான் என்பது ஊருக்கே தெரியும்.

=====================================================
ஜனநாயகம் வாழ , ஊழல் பணம் வெளியே வர அன்னா எதிர்ப்பவர்களை, எதிர்த்து நில்லுங்கள்.