கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!
இடுகை பதில் இடுகைதான் இது. கட்டபொம்மனைப் பற்றி அவதூறு சொல்வது போல எழுதப் பட்டு இருக்கிறது. கொஞ்சம் அறிவே இல்லாமல், சொறனை இல்லாமல் யோசிக்காமல் எழுதப் பட்டு இருக்கிறது. கண்டிப்பாக எதுகை மோனையோடு பேசியிருக்க மாட்டார்தான்.
ஆனால் அவர் காரசாரமாகப் பேசியதால்தான் கோட்டையிலேயே அவரை தங்க (சிறை ) வைக்கப்பட்டார். அங்கு கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை இடுகையாளர் ஒத்துக் கொள்கிறார். இதுவே கட்ட்பொம்மன் வீரன் தான் என்பதற்கு உதாரணம். ஜாக்சனின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு கட்ட பொம்மனைப் பற்றி பேசுவது காமெடியோ காமெடி. அதற்கு பிரபல பதிவர்கள் சைங் சக் வேற.. வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னோட ஒரு பக்கத்து மீசையை எடுத்திட்டுப் போய்ட்டான்னா எழுதி வைச்சிருப்பான்.
நல்லாப் பாருங்க. நாட்ல் பல புரட்சி வீரர்கள கொலை காரார்களாக, கொள்ளைக் காரர்களாக, கற்பழிப்பு வாதிகளாக , கஞ்சா கடத்துபர்களாக கேஸப் போட்டு தூக்குல போடுவதுதான் உலக வழக்கம். நம்ம வீரர்களைப் பத்தி இதுக்கும் மேலயும் எழுதி வைச்சிருப்பாங்க. படிச்சிட்டு மத்தவஙககிட்ட பேசறதுக்கு முன்னாடி கொன்சூடு யோசிங்கப்பூ
13 comments:
கட்டபொம்மன் நல்லவனா கெட்டவனா என்றால் நான் கேட்டவன் என்பேன்... ஆனால் இதற்க்கு முந்தய பதிவும், இதன் விவாதமும் எனக்கு என்ன என்று தெரியாததால் அதை பற்றி பேச என்னிடம் எதுவும் இல்லை...
பதிவில் அப்படி எழுதப்படவில்லை. ஓவ்ர் ரீஆக்ட் பண்ணியிருக்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக எல்லாரையும் யோக்கியன் அல்லது அயோக்கியன் என்று சொல்ல முடியாது. உங்களது கடைசிப்பத்தியை அப்படித்தான் எழுதியிருக்கிறீர்கள். கட்டபொம்முவைப்பற்றி, எட்டயபுரம் மகாராஜாவு அவர் பரம்பரையினரும் வேறுமாதிரி எழுதியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உங்களுக்குத் தெரியுமா ?
வரலாற்றில் எஃதண்மை, எது பொய் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. வரலாற்றை அவரவர் தமக்குப்பிடித்த வண்ணம்தான் எழுதுவார்கள். இது தெரியாதா ?
//suryajeeva said...
கட்டபொம்மன் நல்லவனா கெட்டவனா என்றால் நான் கேட்டவன் என்பேன்...//
தெளிவாகச் சொன்னீங்க அண்ணாச்சி, நாமெல்லாம் கேட்டவங்க அதிலயும் கட்டபொம்மனா ஹீரோவா பாத்தவங்க அவர் மூலமா கொஞ்சநாள் தேச பக்தி வளர்த்தவங்க அவரப் போயி அவர் அப்படியெல்லாம் இல்லைன்னா எப்படி? வாழ்க்கைல சில விஷயங்கள பாசிட்டிவ்ன்னு சொன்னா அப்படியே நம்பி காலத்தை ஓட்டினனும். இப்ப நெகட்டிவ்னு சொல்றதுல்ல ஒரு பிரயோஜனும் இல்லை
காவ்யா said...
பதிவில் அப்படி எழுதப்படவில்லை.
////கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)////
இப்படித்தான் எழுதி இருக்கிறார்கள்,
//கட்டபொம்முவைப்பற்றி, எட்டயபுரம் மகாராஜாவு அவர் பரம்பரையினரும் வேறுமாதிரி எழுதியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உங்களுக்குத் தெரியுமா ? ///
அதத்தான் நான் கடைசிப் பாராவில் சொல்லி இருக்கேன்
எல்லா நாட்லயும் பிடிக்கலேன்னா பொய் கேஸ் போட்டு, அவதூறு கிளப்பி கொன்னே போடுவாஙக
நீங்க கட்ட பொம்மன் ஜாதிக்காரரா?
அட்ரா சக்கை
இனிமேல் நெகடிவ் ஓட்டா, குத்து ராசா குத்து
//நீங்க கட்ட பொம்மன் ஜாதிக்காரரா?//
எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. ஏன் ஒரு வரலாற்று நபரின் மேல் ஏன் இவ்வளவு பாசம்? பொய்க்கேசு வழக்குகள் போட்டு ஆயிரக்கணக்கான எளிய மக்கள் இன்று கொல்லப்படுகின்றன. வாச்சாத்தி 18 பெண்கள் கற்பழிக்கப்ப்ட்டு 17 ஆண்டுகளுக்குப்பின் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் எந்த கோபமும் இல்லை. ஆனால் எப்போதோ வாழ்ந்த ஒரு தமிழ்நாட்டில் ஒரு சிறு ஜமீனை தெலுங்கு நாட்டில் பிறந்த அன்னியன் பிடித்துக்கொண்டு ஆண்டு, ஆங்கிலேயனிடம் பிடிபட்டுச் செத்தான். அவன் கதையை அவன் ஆட்களே ஒன்றும் எழுதவில்லை. எல்லாமே கேள்வி ஞானம்தான். சினிமாக்காரன் கற்பனைகலந்து சிவாஜிக்காக ஒரு கதாபாத்திரத்தை ஜோடனை செய்து வெற்றிகண்டான். எழுதிவைக்கப்பட்டது வெள்ளைக்காரனே. அது கண்டிப்பாக அவனுக்குச் சாதகாமகத்தான் இருக்கும். அதை வெட்டிப்பேச ஆதாரமாக ஏதாவது இருக்கா ? அதை வைத்தால் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலேயன் நம்மை ஆண்ட காலத்தில் இந்தியாவோ, தமிழகமோ துண்டு துண்டு இராச்சியங்களாக இருந்தது. அவனவன் அவன் நன்றாக இருக்க மக்களைப் பிடுங்கித்தான் வாழ்ந்தான்கள். அவன்கள் யோக்கியம், இவன்கள் அய்யோக்கியம் என்பதெல்லாம் சுத்த வேஸ்டான சமாச்சாரம்.
// 17 ஆண்டுகளுக்குப்பின் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் எந்த கோபமும் இல்லை//
உங்க கிட்ட சொல்லிட்டு இனிமேல் கோபப் படுகிறேன்.
//அவன் கதையை அவன் ஆட்களே ஒன்றும் எழுதவில்லை. //
எல்லாத்தையும் சாக வைச்சிட்டா யார் எழுதறாம். ரொம்ப புத்திச்சாலித்தனமா யோசிக்காதீங்க.
//அதை வெட்டிப்பேச ஆதாரமாக ஏதாவது இருக்கா ? அதை வைத்தால் தெரிந்து கொள்ளலாம்.//
நீங்க தப்பும் தவறுமா பேசறதுக்கு ஆதாரம் இருக்கா? நல்ல பொண்ணப் பார்த்து அவதூறு பேசிட்டு நீ நல்லவள்னு சொல்றதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்கறமாதிரி இருக்கு தாயீ
//எப்போதோ வாழ்ந்த ஒரு தமிழ்நாட்டில் ஒரு சிறு ஜமீனை //
எப்பூடி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க. ஒரு கூட்டத்தை அழிச்சிட்டா அவங்களப் பத்தி என்னவேணும்னாலும் பேசலாம்னு சொல்லிக்கொடுப்பீங்க போல
என்னது கட்டபொம்மன் ஒரு ஜெமினா?
அப்டின்னா "திப்பு சுல்த்தானும் ஜமீனா?"
இல்ல "பழசி ராஜாவும் ஜமீனா?"
இவங்க ரெண்டுபேரும் யாருன்னு தெரியுமா? தெரியாதா? அப்போ புதுக்கோட்டையும் ஜமீன்தான?
அக்க தமிழனின் வரலாறு எப்படியெல்லாம் அழிக்கப் பட்டிருக்கிறது.
வரலாற்றை பற்றி எழுதும்பொழுது பலவித வரலாற்று புத்தகங்களை படித்து அத்தாட்சியுடன் எழுத வேண்டும். ஏதோ ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு அதுவே உண்மை என்று பதிவிட்டால், யாருடைய இனிசியலையும் எளிதாக மாற்றி விட்டு தாய்க்கு களங்கம் ஏர்ப்படுத்தலாம்.
//நிவாஸ் said...
வரலாற்றை பற்றி எழுதும்பொழுது பலவித வரலாற்று புத்தகங்களை படித்து அத்தாட்சியுடன் எழுத வேண்டும். ஏதோ ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு அதுவே உண்மை என்று பதிவிட்டால், யாருடைய இனிசியலையும் எளிதாக மாற்றி விட்டு தாய்க்கு களங்கம் ஏர்ப்படுத்தலாம்.//
அழகாச் சொன்னீங்க அண்ணாத்தே
Post a Comment