ஆனா பாருங்க பாஸ். இந்த 2ஜி ,மேட்டருல நடந்ததா சொல்ல காலத்துக்கு முன்னாடி நமக்கு பெரு நகரங்கல்ல மட்டும் செல்ஃபோன் கனெக்ஷன் இருந்திச்சு. சிருநகரங்கள்ல கிடைக்க ஆரம்பிச்சிட்டு இருந்திச்சு. நிறைய அலைக் கற்றை கையில இருந்திச்சு. வந்தவங்களுக்கெல்லாம் டக் டக்ன்னு கொடுத்த பின்னாடி இப்ப பாமர மக்கள்ட்டயும் செல்ஃபோன் வ்ந்திருச்சு, குக்குக் கிராமங்களுக்கு கூட செல்ஃபோன் இருக்கு. எழுதப் படிக்க தெரியாதவங்க கிட்டக் கூட செல்ஃபோன் இருக்கு, யூஸ் பன்றாங்க.
இந்த மாதிரி ஒரு புரட்சி ஏற்படுத்தனவங்கள் பாராட்டாம புடிச்சு உள்ள போட்டு வச்சிருக்காங்க. நாலு பேருக்கு நல்லது நடந்திருக்கு. அப்பாவி மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இப்படி கொடுத்த அலை கற்றை கைமாறி வேற கம்பெணிக்கு போனாக்கூட ஈஸியா கண்டுபிடிக்கற வசதி இருக்கு. அப்புறம் என்ன பாஸ். ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிட முடியும். 120 கோடி மக்கள் ரஸ்க் சாப்பிட வச்சிருக்காங்க. அப்புறம் ஏன் பாஸ் ஊழல் ஊழல்ன்னு சொல்றாங்க.
நிதியமைச்சருக்கு முறைப்படி சொல்லியிருக்காங்க. பிரதமர்ட்ட ஆலோசனை வாங்கி இருக்காங்க. அப்புறம் எங்க ஊழல் வந்திச்சு.
ஆடிட் பார்ட்டி எழுதியிருக்காங்க லட்சம் கோடி வருமான இழப்பு அப்படின்னு. அது எப்படின்னா நீ நல்லாப் படிச்சு பிளேஸ்மெண்ட் ஆனா சிவாஜிமாதிரி ஃபாரின்போயி 200 கோடி சம்பாரிச்சிருக்கலாம் அப்படிங்கற மாதிரி எழுதி இருக்காங்க. அப்படியெல்லாம் ஏழம்போட்டிருந்தா கிராமத்துக்கெல்லாம் எப்படி பாஸ் ஃபோன் கிடைச்சிருக்கும்.
இவங்க ரொம்ப சீப்பா கொடுத்ததாலதான பாஸ் நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்த ஃபோன் பில் இப்ப ரொம்ப கொரைஞ்சு போயி இருக்கு. ஏழம் போட்டு ரேட்ட்ட ஏத்தி விட்டுருந்தா நமக்கும் ஃபோன் பில் ஏறி இருக்காதா பாஸ்?
அப்புறம் ஏன் பாஸ் ராசாவ புடிச்சு உள்ள வெச்சிக்கிட்டு விசாரிச்சிக்கிட்டே இருகாங்க.
5 comments:
இது ஊழல் இல்லை. ஊதல் ! மிகப் பெரிய ஊதல் !
திட்டமிட்ட ஆட்சியைக் கவிழ்க்க வேறு வழிகளைப் பயன் படுத்த முயன்ற "ஆரிவு ஜீவிகள்" பி ஜே பி யின் கை ஆட்கள் செய்த ஊதல்.
மன்த்திடத்துடன் மவுன மோகனர் எல்லாவற்றையும் சொல்லி எப்படிச் செய்யப் பட்டது என்பதைச் சொல்லாமல் சி பி ஐ க்கும், உச்ச அநீதி மன்றத்திற்கும் சலாம் போட்டிருக்க வேண்டியதில்லை.
இது அரசின் திட்டம்.இப்படித்தான் செயல் படுத்தப் பட்டது என்று தெளிவாகச் சொல்லாமல் " ஊதல்" விளையாட்டு விளையாடுகின்றார்.
அவனவன் மனதில் தோன்றிய எண்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
//திட்டமிட்ட ஆட்சியைக் கவிழ்க்க வேறு வழிகளைப் பயன் படுத்த முயன்ற "ஆரிவு ஜீவிகள்" பி ஜே பி யின் கை ஆட்கள் செய்த ஊதல்.//
எங்க ஏரியாவுல என்ன பேசிக்கறாங்கண்ணா தமிழ் ஆளுங்கள தொறத்த வடக்கத்தி ஆட்கள் செஞ்ச வேலை. அதை திமுகவ அழிக்க காங்கிரஸ் பயன்படுத்திக்கிச்சி அப்படின்னும், மத்திய அமைச்சர் பதிவிக்காக பிரச்சனை ராசாவுக்குத்தானே அப்படின்னு திமுகவும் கண்டுக்காம விட்டுட்டாங்கண்ணும் சொல்லிக்கராங்கண்ணா
//மன்த்திடத்துடன் மவுன மோகனர் எல்லாவற்றையும் சொல்லி எப்படிச் செய்யப் பட்டது என்பதைச் சொல்லாமல் சி பி ஐ க்கும், உச்ச அநீதி மன்றத்திற்கும் சலாம் போட்டிருக்க வேண்டியதில்லை.//
அசத்திட்டீங்க அண்ணாச்சி
ராஜா ஒரு தலையாட்டி பொம்மை, முன்னாடி இருந்தவங்க சொன்னத என்னன்னு கேக்காம சென்சார், மத்தபடி கொள்ளை அடிச்சவங்க லிஸ்ட் கீழே, அதிகம் படிக்க ஒரு பதிவின் சுட்டி
ரத்தன் டாட்டா - விற்றது ஜப்பானுக்கு -13200 கோடி ஒரே நாளில்
அம்பானி-தனது பங்கை
UAE இடம் விற்றவர் 4200 கோடி
ஒரு நாளில்
http://reverienreality.blogspot.com/2011/05/2-g-spectrum-where-does-buck-stop.html
மற்றபடி ஊழல் இல்லேன்னு சொன்னா வெங்காயம்
//suryajeeva said...
ராஜா ஒரு தலையாட்டி பொம்மை, முன்னாடி இருந்தவங்க சொன்னத என்னன்னு கேக்காம சென்சார், மத்தபடி கொள்ளை அடிச்சவங்க லிஸ்ட் கீழே, அதிகம் படிக்க ஒரு பதிவின் சுட்டி
ரத்தன் டாட்டா - விற்றது ஜப்பானுக்கு -13200 கோடி ஒரே நாளில்
அம்பானி-தனது பங்கை
UAE இடம் விற்றவர் 4200 கோடி
ஒரு நாளில்
http://reverienreality.blogspot.com/2011/05/2-g-spectrum-where-does-buck-stop.html
மற்றபடி ஊழல் இல்லேன்னு சொன்னா வெங்காயம்//
நீங்க என்ன சொல்றீங்கண்ணா நல்லா படிச்சிருச்சிருந்தா நெறயா மார்க் வாங்கி பிளேஸ்மெண்ட் ஆகி கோடி கோடியா சம்பரிச்சி இருக்கலாம்னு சொல்றீங்க. நான் என்ன சொல்றேன்னா இப்படி கொஞ்சம் ஃபிரியா இருந்ததாலதான் பட்டிகாடு வரைக்கும் ஃபோன் கிடைச்சிதுண்ணு சொல்றேன்.
அரசாங்கஏ ஒழுங்கா அலைக்கற்றையை மெயிண்டன் பண்ணி இருந்தா நீங்க சொல்றமாதிரி அந்த ஆளுங்க அடிச்சதெல்லாம் அரசாங்கத்துக்கு கிடைச்சிருக்கும். அதவிட்டுட்டு வெளியாளுக்கு கொடுத்திட்டு அவன் சம்பாரிச்ச பிறகு அய்யோ அம்மா அப்படின்னா எப்படின்னே. அம்பானி பண்ணினது தொழில்னே, நம்ம ஆளுங்க தொழில்செய்ய துப்பில்லாம வித்துட்டாங்க. அதன் அவர் விட்து காசாக்கிட்டார். இதில் ஊழல் எங்கிருந்து வ்ந்தது.
Post a Comment