கருப்பு எம்ஜியார் தனது வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி பார்த்து இருக்கார். அவர் திரும்பவும் வளர்ச்சி பாதையில் திரும்ப இந்த வீடியோ காட்சியப் பார்த்தாலே போதும். இதப் புரிஞ்சி அரசியல் நடத்தினா அடுத்த பத்து, பதினைந்து வருஷங்களுக்கு பா.ம.க. நிலைமையில் நிற்கலாம். இல்லைன்னா, இப்ப பாமக நிலைமைக்கே போய் விடுவார். ஆல் தி பெஸ்ட் கேப்டன்
7 comments:
மக்கள் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா?
அரசியல் வரணும்ணு விருப்பம் இருக்கறவங்க, அரசியலுக்கு வந்தவங்க நல்லவங்களா மாறணும், திறமைசாலியா உருவாகணும், அதுதான் நல்லது.அரசியலுக்கு வரமாட்டேன் ஆனா மத்தவங்கள குறை சொல்லிட்டே இருப்பேன்னு சுத்தறவங்க மத்தில கேப்டன் எவ்வளோ பரவாயில்லை
பேண்ட் போட்ட நகரசுத்தி தொழிலாளிய நிஜத்தில பார்த்ததேயில்ல நீங்க பாத்தா
சொல்லுங்க வெங்காயம்
//வலிபோக்கன் said...
பேண்ட் போட்ட நகரசுத்தி தொழிலாளிய நிஜத்தில பார்த்ததேயில்ல நீங்க பாத்தா
சொல்லுங்க வெங்காயம்//
தொப்பி போட்டுக் கொண்டே சுத்தின சுதந்திரப் போராட்டவீரர்கள் இந்தியாவில் யாராவது உண்டா? ஆனால் உங்க ப்ரொஃபைல் ஃபோட்டாவில் உள்ளவர் எப்போதும் தொப்பியுடந்தான் அறியப் படுவார். அப்படித்தான் சார் இது. ஒரு ஃபேண்டஸி, இவரைப் பார்த்தாவது நாலுபேர் நல்ல உடையுடன் வந்திருந்தால் நல்லதுதானே. மொதல்ல கோவணம். அப்புறம் அரைடவுசர், அரைடவுசருடன் இப்போது சட்டை. கொஞ்சம் கொஞ்சமா முன்னேற இது போன்ற கற்பனைகள் அவசியம்
//கொஞ்சம் கொஞ்சமா முன்னேற இது போன்ற கற்பனைகள் அவசியம்//
பகத் சிங் தொப்பி போட்ட மாதிரி இருப்பது கற்பனை என்கிறீர்களா? புரியல, நீங்க கொடுக்கும் விளக்கம்... மன்னிக்கவும் ஒரு வேலை எனக்கு அந்த அளவுக்கு மூளை இல்லைன்னு நினைக்கிறேன்
//அரசியலுக்கு வரமாட்டேன் ஆனா மத்தவங்கள குறை சொல்லிட்டே இருப்பேன்னு சுத்தறவங்க மத்தில கேப்டன் எவ்வளோ பரவாயில்லை//
நீங்க பெரியார சொல்லல இல்ல?
//suryajeeva said...
//கொஞ்சம் கொஞ்சமா முன்னேற இது போன்ற கற்பனைகள் அவசியம்//
பகத் சிங் தொப்பி போட்ட மாதிரி இருப்பது கற்பனை என்கிறீர்களா? புரியல, நீங்க கொடுக்கும் விளக்கம்... மன்னிக்கவும் ஒரு வேலை எனக்கு அந்த அளவுக்கு மூளை இல்லைன்னு நினைக்கிறேன் //
அப்படி இல்ல அண்ணாச்சி. எம்ஜியார் ஃபுல்டவுசர் போட்டு நடிச்சதுதான் கற்பனை. ஆனா அது அவசியம்ன்னு சொல்றேன். வித்தியாசமா இருந்தாகூட கேள்வி கேட்டு குழப்பிக்காம அப்படியே ஏத்துக்கிட்டா நல்லதுன்னு சொல்றேன்
// சுத்தறவங்க மத்தில கேப்டன் எவ்வளோ பரவாயில்லை//
சுத்தறவங்க = நிகழ்காலம்
Post a Comment