மொதல்ல விஜய் திமுக அனுதாபியா இருந்தார். ஸ்டாலின் மேல இருக்கற பற்று காரணமா இளைய தளபதின்னு பேரு கூட தனக்குத்தானே வச்சிக்கிட்டு இருந்தார். அந்தக் காலத்திலயே படத்தில ஒரு பாட்டுப் பாடி இந்தப் பாடலைப் பாடியவர் இளைய தளப்தின்னு போடச் சொல்லி அத டிவியில ஒளிபரப்பி ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தார். உதயான்னு ஒரு படம் கூட எடுத்தார். திமுக் அரசாங்கம் மூலமா நன்கொடை எல்லாம் கொடுத்தார்.
அதற்கப்புறம் திமுகவுல் உள்ளவர்களுக்கு அவருக்கும் என்னவோ பிரச்சனைகள் சொல்லிக்கிட்டாங்க. அவர் படமே ரிலிஸ் ஆக போச்சு. அப்புறம் அம்மாவ சந்திச்சாரு. அப்படி இப்படின்னு காவலன் ரிலீஸ் பண்ணீனாரு. தேர்தல்ல அவங்க அப்பா அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தாரு. அதிமுக செயித்தவுடனே ஒரு சூப்பரா ஒரு ட்ரெயிலர வேலாயுதம் படத்துக்கு எடுத்து ரிலீஸ் ப்ண்ணினாரு.
====================================================
புராணக் கதைல பாத்தீங்கண்ணா அப்பா சிவபெருமானோட மகன் முருகன். சிவ்பெருமானோட வரம் பெற்ற ஆட்கள் சூரன் குரூப்ஸ் இம்சை தாங்க முடியாம போச்சு. அப்பானால அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமை. இப்பத்தான் அம்மா எண்ட்ரி கொடுக்கறாங்க. அப்பாவோட புள்ளைக்கு தன்னோட சக்திய திரட்டி ஆயுதமா தர்ராங்க. அதுதான் வேலாயுதம். அத பயன்படுத்தி முருகன் சூரன் பிரதர்ஸை அழிச்சர்ராரு. இதுதான் வேலாயுதம் கதை. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு ஒற்றுமை ஓடிக்கிட்டே இருக்கு பாத்தீங்களா.
சோ வேலாயுதம் கண்டிப்பா வெற்றித்தான்னு நினைக்கறீங்களா
ஆனா பாத்தீங்கண்ணா இன்னைக்கு தீபாவளி. தீபாவளி ஏன் கொண்டாடரோமுன்னா ம்கன் பண்ற இம்சை தாங்கமுடியாத அம்மா அவங்களே டைரக்டா வந்து கதையை முடிக்கறாங்க. என்னமோ தீடின்னு இந்தக் கதை ஞாபகம் வந்து தொலைக்குது.
காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைச்சத விட வேலாயுதம் படத்துக்கு சாதா தியெட்டர்களாதான் கிடைச்ச மாதிரி தோணுது. ஏம்பாஸ். ஏதாவது தீபாவளி ஆகிப் போயிட்யுமா?
4 comments:
Wish You Happy Diwali U & Your Family
//! ஸ்பார்க் கார்த்தி @ said...
Wish You Happy Diwali U & Your Family//
நன்றி பாஸ்.
Deepavali nalvaazhthukkal. Ungalukum ungaladhu kudumbathinarukum.
//Saravanaa said...
Deepavali nalvaazhthukkal. Ungalukum ungaladhu kudumbathinarukum.//
நன்றி சரவணா
Post a Comment