ஏன்ன்னா
1.அவர் தேர்தல்ல போட்டியிடமாட்டேன்னு சொல்லிட்டார்.
2.ஆனா காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்லிட்டார்.
3.அவர் உண்ணாவிரதம் இருந்தாலே அங்கு வரப்போற மக்களுக்கு நல்ல பொழுது போக்கு தீனி கிடைக்கும் இனி இவர் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சா ம்க்களுக்கு எவ்ளோ பொழுது போக்கு, எவ்ளோ தீனி. ம்க்கள் பணம் மக்களுக்காக தண்ணி மாதிரி செலவு செய்ய ஆரம்பிச்சிருவாங்க
4.எடியூரப்பா, மோடி மாதிரி ஆட்களை பகைச்சிக்க விரும்பல. இது போன தேர்தல்ல வடிவேலு பாணி. (அவர் கடைசி வரைக்கும் அம்மாவை திட்டல) நம்ம ஊர் கார ஃபாலோ பண்றவர நாமதான ஊக்கம் கொடுக்கணும்.
5அவர் போற வார எடத்துக்கெல்லாம் கைமுறுக்கு, சிப்ஸ், மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்கள் விற்பனை பெருகும். அதுனால் சிறு தொழில்களும் வளரும்.
6.ராகுல் காந்தி மாதிரி வளர்ந்து வரும் ஒரு மாபெரும் தலைவருக்கு தினமும் அறிக்கை கொடுப்பது, பதில் கொடுப்பது மாதிரி பயிற்சி அளித்து வருகிறார். அதனால் அவர் எதிர்காலத்தில் அமெரிக்கா, சீனா விவகாரங்களில் பதில் சொல்லும்போது ஓரளவு தேறி விடுவார்.
7.இளைய தளபதி விஜயின் ஆதரவு அன்னா ஹஜாராவேவுக்கு இருக்கு அதனால் பன்ச் டயலாக பிண்ணி எடுப்பார். ஏற்கனவே விஜய் பின்பற்றி வரும் மகேஷ் பாபுவின் வழியும் பன்ச் வழிதான் என்பது ஊருக்கே தெரியும்.
=====================================================
ஜனநாயகம் வாழ , ஊழல் பணம் வெளியே வர அன்னா எதிர்ப்பவர்களை, எதிர்த்து நில்லுங்கள்.
2 comments:
பதவி கிடைச்சா வேலை செய்ய மாட்டாராம்... அதையும் சேர்த்துக்குங்க உங்க உள் குத்துல
NICE ..:))
Post a Comment