Sunday, 23 October 2011

திமுக, திரும்ப வருவோம்ல

பாருங்க பாஸ், உள்ளாட்சித் தேர்தல்ல அதிமுக பெரிய வெற்றி அடைந்தாலும் திமுக ஒரு மூணில ஒரு பாகம் ஜெயிச்சிருக்காங்க பாஸ். திமுக ஜெயிச்ச இடங்கள் பார்த்தீங்கன்னா ஒரு உண்மை தெரியும். பெரும்பாலும் பழைய அமைச்சர்களோட நெருக்க்கமான ஆட்கள் தோத்து போயிருக்காங்க. அதே நேரத்தில் நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க. காங்கிரஸ் கூட்டணிய கழட்டி விட்ட பிறகும், ஆளுங்கட்சி ஜெயிச்சாத்தான் ஊருக்கு சலுகை கிடைக்கும் என்ற எண்ணத்திற்கும் மேலாக சட்ட மன்ற தேர்தல விட இந்த தேர்தல்ல திமுக அதிகமா ஓட்டு வாங்கி இருக்காங்க.

திருச்சி இடைத்தேர்தலிலும் கூட கொஞ்சம் தான் ஓட்டு கொறச்சிருக்கு. நேரு ஜெயிச்சா சட்டசபைக்கு போகவே மாட்டார். பெரும்பாலும் வெளிநடப்புதான். இல்லையின்னா உள்நடப்புன்னு தெரிஞ்சும். காங்கிரஸ், பாமக ஓட்டுக்கள் இல்லாமலே போன தேர்தல்ல விட இப்ப கொஞ்சம்தான் ஓட்டு கொறைஞ்சிருக்கு. ஒருவேளை நேருவிக்கு பதிலா யாராவது மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிக் காரங்க யாரையாவது போட்டு இருந்தா திருச்சில ஜெயிச்சுக் கூட இருக்கலாம். திமுக விட இந்த உள்ளாட்சித் தேர்தல் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கழட்டிவிட்டு, அவங்கள் எதிர்க்க ஆரம்பிக்கணும். 2ஜி ஊழல்ன்னு சொல்றதுல நடந்தது என்ன? ஏன் இப்படின்னு திமுக காரங்கள மாட்டிவிட்டிருங்காங்க அப்படின்னு ஊருக்குச் சொல்லணும். காங்கிரஸ் கட்சிய அழிக்கணும்னா அது திமுகவால மட்டும்தான் முடியும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

கேப்டன் பார்க்க வேண்டிய வீடியோ

கருப்பு எம்ஜியார் தனது வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி பார்த்து இருக்கார். அவர் திரும்பவும் வளர்ச்சி பாதையில் திரும்ப இந்த வீடியோ காட்சியப் பார்த்தாலே போதும். இதப் புரிஞ்சி அரசியல் நடத்தினா அடுத்த பத்து, பதினைந்து வருஷங்களுக்கு பா.ம.க. நிலைமையில் நிற்கலாம். இல்லைன்னா, இப்ப பாமக நிலைமைக்கே போய் விடுவார். ஆல் தி பெஸ்ட் கேப்டன்

Sunday, 16 October 2011

புரட்சித் தலைவன் ஆ.ராசா

ஊழல் ஊழல்ன்னு பேசுவாங்க பாஸ், உலகத்தில பல ஊழல்கள் நடந்திருக்கு. அமெரிக்காவுல நடந்திருக்கு, ரஷ்யாவில நடந்திருக்கு, வெளிய தெரிஞ்சு ஆட்சியே மாறிப் போயிருக்கு. ஊழல்ண்ணா என்ன நடக்கும். பொதுமக்களுக்காக செய்ய வேண்டிய வேலைய தனக்கு வேண்டியவங்களுக்குக் கொடுத்து அதன் மூலமா பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள்ல மேக்ஸிமம் தன்னோட பாக்கெட்டுக்கு கிடைக்கறமாதிரி பண்ணிக்குவாங்க. அதனால அந்த திட்டம் சீரளிஞ்சு போயிடும். ஒரு சிலர் போணாப் போகுதுண்ணு ஒரு 10% பொதுமக்களுக்கு கிடைக்கற மாதிரி பண்ணுவாங்க.

ஆனா பாருங்க பாஸ். இந்த 2ஜி ,மேட்டருல நடந்ததா சொல்ல காலத்துக்கு முன்னாடி நமக்கு பெரு நகரங்கல்ல மட்டும் செல்ஃபோன் கனெக்‌ஷன் இருந்திச்சு. சிருநகரங்கள்ல கிடைக்க ஆரம்பிச்சிட்டு இருந்திச்சு. நிறைய அலைக் கற்றை கையில இருந்திச்சு. வந்தவங்களுக்கெல்லாம் டக் டக்ன்னு கொடுத்த பின்னாடி இப்ப பாமர மக்கள்ட்டயும் செல்ஃபோன் வ்ந்திருச்சு, குக்குக் கிராமங்களுக்கு கூட செல்ஃபோன் இருக்கு. எழுதப் படிக்க தெரியாதவங்க கிட்டக் கூட செல்ஃபோன் இருக்கு, யூஸ் பன்றாங்க.

இந்த மாதிரி ஒரு புரட்சி ஏற்படுத்தனவங்கள் பாராட்டாம புடிச்சு உள்ள போட்டு வச்சிருக்காங்க. நாலு பேருக்கு நல்லது நடந்திருக்கு. அப்பாவி மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இப்படி கொடுத்த அலை கற்றை கைமாறி வேற கம்பெணிக்கு போனாக்கூட ஈஸியா கண்டுபிடிக்கற வசதி இருக்கு. அப்புறம் என்ன பாஸ். ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிட முடியும். 120 கோடி மக்கள் ரஸ்க் சாப்பிட வச்சிருக்காங்க. அப்புறம் ஏன் பாஸ் ஊழல் ஊழல்ன்னு சொல்றாங்க.

நிதியமைச்சருக்கு முறைப்படி சொல்லியிருக்காங்க. பிரதமர்ட்ட ஆலோசனை வாங்கி இருக்காங்க. அப்புறம் எங்க ஊழல் வந்திச்சு.

ஆடிட் பார்ட்டி எழுதியிருக்காங்க லட்சம் கோடி வருமான இழப்பு அப்படின்னு. அது எப்படின்னா நீ நல்லாப் படிச்சு பிளேஸ்மெண்ட் ஆனா சிவாஜிமாதிரி ஃபாரின்போயி 200 கோடி சம்பாரிச்சிருக்கலாம் அப்படிங்கற மாதிரி எழுதி இருக்காங்க. அப்படியெல்லாம் ஏழம்போட்டிருந்தா கிராமத்துக்கெல்லாம் எப்படி பாஸ் ஃபோன் கிடைச்சிருக்கும்.

இவங்க ரொம்ப சீப்பா கொடுத்ததாலதான பாஸ் நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்த ஃபோன் பில் இப்ப ரொம்ப கொரைஞ்சு போயி இருக்கு. ஏழம் போட்டு ரேட்ட்ட ஏத்தி விட்டுருந்தா நமக்கும் ஃபோன் பில் ஏறி இருக்காதா பாஸ்?

அப்புறம் ஏன் பாஸ் ராசாவ புடிச்சு உள்ள வெச்சிக்கிட்டு விசாரிச்சிக்கிட்டே இருகாங்க.

Saturday, 8 October 2011

கட்டபொம்மன் வசனம் உண்மைதான் - ஆதாரத்துடன்

கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!


இடுகை பதில் இடுகைதான் இது. கட்டபொம்மனைப் பற்றி அவதூறு சொல்வது போல எழுதப் பட்டு இருக்கிறது. கொஞ்சம் அறிவே இல்லாமல், சொறனை இல்லாமல் யோசிக்காமல் எழுதப் பட்டு இருக்கிறது. கண்டிப்பாக எதுகை மோனையோடு பேசியிருக்க மாட்டார்தான்.


ஆனால் அவர் காரசாரமாகப் பேசியதால்தான் கோட்டையிலேயே அவரை தங்க (சிறை ) வைக்கப்பட்டார். அங்கு கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை இடுகையாளர் ஒத்துக் கொள்கிறார். இதுவே கட்ட்பொம்மன் வீரன் தான் என்பதற்கு உதாரணம். ஜாக்சனின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு கட்ட பொம்மனைப் பற்றி பேசுவது காமெடியோ காமெடி. அதற்கு பிரபல பதிவர்கள் சைங் சக் வேற.. வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னோட ஒரு பக்கத்து மீசையை எடுத்திட்டுப் போய்ட்டான்னா எழுதி வைச்சிருப்பான்.

நல்லாப் பாருங்க. நாட்ல் பல புரட்சி வீரர்கள கொலை காரார்களாக, கொள்ளைக் காரர்களாக, கற்பழிப்பு வாதிகளாக , கஞ்சா கடத்துபர்களாக கேஸப் போட்டு தூக்குல போடுவதுதான் உலக வழக்கம். நம்ம வீரர்களைப் பத்தி இதுக்கும் மேலயும் எழுதி வைச்சிருப்பாங்க. படிச்சிட்டு மத்தவஙககிட்ட பேசறதுக்கு முன்னாடி கொன்சூடு யோசிங்கப்பூ

Wednesday, 5 October 2011

இனிமேல் நான் அன்னா ஹஜாரே ஆதரவாளன்

நான் அண்ணா ஹஜாராவை ஆதரிக்க தொடங்கிவிட்டேன்.

ஏன்ன்னா

1.அவர் தேர்தல்ல போட்டியிடமாட்டேன்னு சொல்லிட்டார்.

2.ஆனா காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்லிட்டார்.

3.அவர் உண்ணாவிரதம் இருந்தாலே அங்கு வரப்போற மக்களுக்கு நல்ல பொழுது போக்கு தீனி கிடைக்கும் இனி இவர் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சா ம்க்களுக்கு எவ்ளோ பொழுது போக்கு, எவ்ளோ தீனி. ம்க்கள் பணம் மக்களுக்காக தண்ணி மாதிரி செலவு செய்ய ஆரம்பிச்சிருவாங்க

4.எடியூரப்பா, மோடி மாதிரி ஆட்களை பகைச்சிக்க விரும்பல. இது போன தேர்தல்ல வடிவேலு பாணி. (அவர் கடைசி வரைக்கும் அம்மாவை திட்டல) நம்ம ஊர் கார ஃபாலோ பண்றவர நாமதான ஊக்கம் கொடுக்கணும்.

5அவர் போற வார எடத்துக்கெல்லாம் கைமுறுக்கு, சிப்ஸ், மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்கள் விற்பனை பெருகும். அதுனால் சிறு தொழில்களும் வளரும்.

6.ராகுல் காந்தி மாதிரி வளர்ந்து வரும் ஒரு மாபெரும் தலைவருக்கு தினமும் அறிக்கை கொடுப்பது, பதில் கொடுப்பது மாதிரி பயிற்சி அளித்து வருகிறார். அதனால் அவர் எதிர்காலத்தில் அமெரிக்கா, சீனா விவகாரங்களில் பதில் சொல்லும்போது ஓரளவு தேறி விடுவார்.

7.இளைய தளபதி விஜயின் ஆதரவு அன்னா ஹஜாராவேவுக்கு இருக்கு அதனால் பன்ச் டயலாக பிண்ணி எடுப்பார். ஏற்கனவே விஜய் பின்பற்றி வரும் மகேஷ் பாபுவின் வழியும் பன்ச் வழிதான் என்பது ஊருக்கே தெரியும்.

=====================================================
ஜனநாயகம் வாழ , ஊழல் பணம் வெளியே வர அன்னா எதிர்ப்பவர்களை, எதிர்த்து நில்லுங்கள்.

Thursday, 29 September 2011

பதிவுலகில் அன்னா ஹஜாரே

ரெண்டாம் சுதந்திரப் போரை முன்னோக்கி நடத்தி வரும் அன்னா ஹஜாரே அவர்கள் இப்ப பிளாக்கர், ஃபேஸ் புக் , டிவிட்டர் எல்லாத்திலும் ஒரு அக்கவுண்ட் ஓபென் செய்து நாடு முழுக்க சுதந்திர உணர்ச்சிய ஊட்டிக்கிட்டு இருக்காராம். ஏற்கனவே நமெல்லாம் பதி வுலகில் உட்கார்ந்து நாட்டு எவ்வள்வோ நன்மைசெய்ய முயற்சி செய்துக்கி ட்டு இருக்கோம். இப்ப அன்னா வும் சேர்ந்திக்கிட்டாருல்ல, இனிமேல் நாட்டு ரெண்டாம் சுதந்திரப் போர், மூணாம் சுதந்திரப் போர் அப்படி இப்படின்னு ஒரே அலப்பரை கிளப்பப் போகுது.

பதிவுலகில் ஐடியா மணி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற பதிவர்களின் டவுசரை அன்னா ஹஜரே கிளிப்பார் என்பது உறுதி, ஆனால் அவர் தமிழ் மணம், இண்ட்லியில் சேர்ந்திட்டாரான்னு தெரியல, தெரியலன்னா என்ன அன்னா பதிவ நாம் சேர்த்துவோம்.

ஏற்கனவே ஃபேக் ஐ பி எல் பிளேயர் அப்படின்னு ஒருத்தர் ஒரு ப்ளாக ஆரம்பிச்சு வெகு சீக்கிரத்தில் நிறைய ஃபாளோயர் அப்புறம் ஹிட்ஸ் வாங்கிக் குவிச்சாருல்ல அவரை அன்னா பீட் பண்ணிருவாருன்னு நினைக்கிறேன்

ஜெய்ஹிந்த்., ஓ சாரி சாரி
\வந்தே மாதரம்

https://annahazaresays.wordpress.com வேணும்னா ஒரு எட்டு எட்டிப் பார்த்திடுங்க.

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது

சில விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் உண்மை, திரிக்கப்பட்ட உண்மை, உண்மை அல்லாத செய்திகள் பற்றி தெரிந்து தெளிய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது

==================================================================

நன்றிhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=322332


:"சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்த குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,'' என, இந்திய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.


கூடங்குளம் குறித்து, இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்:
* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.
* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.
* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.
* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.
* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.
* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.
* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை.


- ஹெச்.ஷேக்மைதீன் -