Friday, 27 May 2011

விடுதலை பத்திரிக்கை பெயரில் போலிகள்?

விடுதலை என்பது பெரியாரால் ஆரம்பிக்க பத்திரிக்கை என்பது தெரியும்

http://viduthalai.in/new/


http://viduthalai.periyar.org.in/20100222/news02.html


http://rootsredindia.blogspot.com/


http://warmcall.blogspot.com/



ஆகிய தளங்கள் விடுதலை என்ற பெயரில் இயங்கி வருகின்றன். இதில் முதல் இரண்டு தளங்கள் ஏறக்குறைய திராவிட இயக்கத்தின் பெரியார் போலவே உள்ளன. அடுத்த இரண்டும் திராவிடர் கழகத்தின் பேச்சுக்களை வெளியிட்டு வந்தாலும் அதில் தங்கள் கருத்தையும் சேர்த்து வெளியிட்டு விடுகின்றன. அதாவது வெள்ளை நிறத்தில் இருப்பதெல்லாம் கள் என்று தி.க வில் தீர்மாணம் போட்ட்தாக இந்த இடங்களில் வெளிவந்தால் ஓஹோ அதுதான் நமது நிலைப் பாடு போல என்று நினைத்துக் கொள்ள நேரிட்டுவிடும். இன்னும் எத்தனையோ தளங்கள் தங்களுக்கு விருப்பமான பெயரை வைத்துக் கொண்டு அவரவருக்கு பிடித்த வகையில் பெரியார் செய்திகளை வெளியிடுகின்றன. இன்னும் சிலர் ஜீ.வி செய்திகளையும் போடுகின்றன. படிப்பவர்கள் இதெல்லாம் பதிவருக்கு பிடித்த்தாகத்தான் நினைப்பார்களே தவிர அப்படியே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் விடுதலையில் மட்டும் ஏன் இப்படி அதே பெயரில் இத்தனை? இதில் எது உண்மை? அது போலி? போலி இருக்கிறதென்றால் ஏன் போலிகள் வந்துள்ளன. பெரியாரைப் பிடிக்காதவர்களால்தான் இது நட்த்தப் படுகிறது என்றால் காரணங்கள் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்

No comments:

Post a Comment