ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் முன்வைக்கும் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை:
லோக்பால் மசோதாவை வலுவாக்கி,ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். வெங்காயத்தின் கருத்து:- அற்புதம் அப்படியே லஞ்சம் கொடுப்பவர்களையும் தூக்கில் போட வேண்டும் |
* வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் மொத்தத்தையும் உடனடியாக மீட்பதுடன், உரிய வரிகளை வசூல் செய்ய வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- இதற்காக மந்திர தந்திரம் நிறைந்த சாமியார்கள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும்
* மீட்கப்படும் இந்தியர்களின் கறுப்பு பணம் மொத்தத்தையும் தேசிய சொத்தாக பிரகடனம் செய்ய வேண்டும்.
வெங்கயாததின் கருத்து:- ஆமாம் ஆனால் மடங்களில் இருக்கும் பணங்கள் எல்லாம் அறக்கட்டளைச் சொத்து என்று பெயரில் தேசிய சொத்தாக ஆக்கப் படும்
* ரூ.1,000, ரூ.500 கரன்சி நோட்டுகளை ரத்து செய்து ஒழித்திட வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- அதற்குப் பதிலாக 1,00,000, 50,000 நோட்டுக்கள் கொண்டு வர வேண்டும். காணிக்கைகள் பெற்றுக் கொள்வது அப்போதுதான் சுலபமாக இருக்கும்.
* தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்து, பிரதமரை வாக்காளர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வழிவகுக்க வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- அதே பொல் ஒவ்வொரு சட்டத்தையும் நிறைவேற்றும்போதும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
* குடிமக்கள் அனைவரும் தங்கள் ஆண்டு வருமான விவரத்தை சமர்ப்பிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- அதே போல் சாமியார்களுக்கு போடும் காணிக்கைக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்.
* நாடு தழுவிய அளவில் தொழிலாளர்களின் சம்பள விகிதம் ஒரே சீராக இருக்க வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- அனைத்து நடிகர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம். குறைந்தபட்சம் ஹீரோக்களுக்காவது. அனைத்து சாமியார்களுக்கும் ஒரே மாதிரி காணிக்கை விகிதங்கள்
* நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெற்று, தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் வாங்கக் கூடாது.
வெங்காயத்தின் கருத்து’- தொழிற்சாலைகளுக்கான நிலங்களை வானத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
* ஊழல் குற்றச்சாட்டுக்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பளித்திட, எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
* ஊழல்வாதிகளுக்கு உடக்குடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- ஊழல் என்றால் என்ன என்பதை முதலில் வரையறை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்,.
* தாய்மொழியிலேயே தொழிற்கல்வி படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- யாராருக்கு எதுவெல்லாம் தாய்மொழி என்பதை ஒரு குழுவைத்து கண்டறீய வேண்டும்.
* பொதுச் சேவை உறுதிச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
வெங்கயாத்தின் கருத்து:-சாமியார்களின் சேவை அந்தரங்கச் சேவையா ? பொதுச் சேவையான்னு தெரியவில்லையே
* ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை முன்னிலைப்படுத்த வேண்டும்.
வெங்காயத்தின் கருத்து:- முன்னிலை இந்தின்னா தலைமையை தமிழுக்குக் கொடுப்பார்களா?
கோரிக்கைப் பட்டியல் வழங்க்கிய http://new.vikatan.com/news.php?nid=2235 க்கு நன்றி
2 comments:
யாராவது இந்த வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைக்க உதவி செய்யவும். நான் பல மின்னஞ்சல்கள் அணுப்பி விட்டேன்
சூப்பர் அண்ணே... தமிழ் மணத்தில் தான் நான் பார்த்தேன்.. இணைந்து விட்டது .வாழ்த்துக்கள்
Post a Comment