அன்னாஹசாரேவின் போராட்டத்துக்குச் செய்யப்படும் செலவுகள் கடந்த முறை செலவு செய்யப்பட்டதைவிட அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். போராட்ட அமைப்பாளர்கள் இவர்களுக்கு போராட்ட விளக்க கையேடுகளையும், சிறிய புத்தகங்களையும் வழங்கி வருகின்றனர்.
மைதானத்துக்குள் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வாடகை தவிர படுக்கைகள், வாகனங்கள் ஆகியவையும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் சாப்பாடு, குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக தினமும் ரூ. 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவில் அமைப்பாளர்களின் செல்போன் கட்டணமும் அடங்கும்.
அன்னாஹசாரே கடந்த ஏப்ரல் மாதம் ஜந்தர்மந்தரில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது மொத்தம் 32.70 இலட்சம் செலவானதாகக் கூறப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர்தான். ஆனால் தற்போதைய போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த முறை உண்ணாவிரதத்தின் செலவு கடந்தமுறையைவிட அதிகமாக இருக்கும்.
ராம்லீலா மைதானத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்ககூடிய உணவு கவுண்டர்களை திறந்துள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் மூலம் வாரத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர டெல்லி மாநகராட்சியின் தொழிலாளர்கள் சங்கமும் ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி உள்ளன.
பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச மருத்துவ சோதனை மையங்களை திறந்துள்ளது. தேவையானவர்களுக்கு முதலுதவி அளிப்பதுடன் மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.
உண்ணாவிரத வளாகத்துக்குள் 6 நடமாடும் கழிவறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேனிலும் 12 கழிவறைகள் உள்ளன. ஆனால் அங்கு கூடும் கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.
இதய சிறப்பு நிபுணர் டாக்டர் நரேஷ் கிரேஹன் நடத்தும் மெடான்டா அதி நவீன ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.
தனியார்கள் தவிர அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையிலும், மேடைக்கு அருகிலும் “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உண்ணாவிரத காட்சியை டெல்லி போலீசார் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.
உண்ணாவிரதம் நடைபெறும் இடம் அருகே வாகனங்கள் வந்து செல்வது அதிகரித்துள்ளதால், ராம்லீலா மைதானம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் விற்பனையாகும் பெட்ரோலின் அளவு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 லிட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.

நன்றி:-http://www.inneram.com/2011082118506/hazares-fast-fuelling-profits-at-this-petrol-pump
2 comments:
//
அன்னாஹசாரேவின் போராட்டத்துக்குச் செய்யப்படும் செலவுகள் கடந்த முறை செலவு செய்யப்பட்டதைவிட அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
//
பாராளுமன்றத்தில் வெட்டியாய் பண்ணும் செலவை என்ன பண்றது ?
இதுக்கு கணக்கு பார்த்தா நம்மை யாரும் காப்பாத்த முடியாது
Post a Comment